

இசை: அடேங்கப்பா...எத்தனை books!
இனியன்: அதுவும் story books க்கா.
உமையாள்: எவ்வளவு colourful ஆ இருக்குது பாரேன்.
மித்ரன்: எங்க அப்பா பிலிப்பைன்ஸ்க்கு வேலைக்கு போயிருக்காங்கனு சொன்னேன்ல.
அவர் ஊருக்கு வந்திருக்கார். One week vacation.
இசை: அப்படியா. ஜாலிதான் அப்போ.
மித்ரன்: ஆமாம். இந்த books எல்லாம் நமக்குதான் வாங்கிட்டு வந்திருக்கார்.
இனியன்: இது ஜாலியோ ஜாலி.
மித்ரன்: உங்க எல்லாருக்கும் கொடுக்கதான் எடுத்துட்டு வந்தேன்.
இனியன்: எத்தனை varieties பாருங்க.
இசை: பார்க்க பார்க்க அவ்வளவு ஆசையா இருக்குது.
உமையாள்: ஆளுக்கு ஒரு புத்தகத்தை எடுத்து நாம படிக்கலாம்.
இனியன்: அப்பா எப்போ ஊருக்கு கிளம்புறார்.
மித்ரன்: Coming Sunday. The flight will start at 3 am.
இனியன்: Early morningன்னு சொல்லு. அந்த நேரத்தில்தான் நான் நல்ல தூங்கிட்டு இருப்பேன்.
பாட்டி: The flight will take off at 3 am ன்னு சொன்னால் எப்படி இருக்கும்?
மித்ரன்: Take off ஆ?
இனியன்: Off என்றால் அணைக்கிறது என்றுதானே அர்த்தம்.
இசை: Switch off the light, Switch off the fanன்னு சொல்லுவோமே அது போலவா?
பாட்டி: நீங்க சொல்லுறது எல்லாமே correct தான்.
இனியன்: அப்போ எதுக்கு பாட்டி take off ன்னு சொன்னீங்க.
பாட்டி: நான் சொல்லுறதும் correctதான்.
உமையாள்: எனக்கு புரிஞ்சிடுச்சு. பாட்டி புது topic ஓட வந்திருக்காங்க. நீங்க சொல்லிக் கொடுங்க பாட்டி.
பாட்டி: Phrasal verbs பற்றி இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
இசை: Phrasal verb ஆ? அப்படி என்றால் என்ன பாட்டி?
மித்ரன்: பெயரிலேயே verb இருக்கிறது.
இசை: அப்படியென்றால் இதுவும் ஒரு வகையான verb தான். Am I right?
பாட்டி: You are right. Phrasal verb ஆனது இரண்டு வார்த்தைகளை கொண்டு இருக்கும். ஒன்று main verb. மற்றொன்று preposition அல்லது adverb. இந்த இரண்டில் ஏதாவது ஒன்று main verb ற்கு அடுத்து வரும்.
உமையாள்: அப்படியெனில், இந்த combination-க்கு பெயர் தான் phrasal verb.
பாட்டி: Correct. இதை expression என்றும் சொல்லலாம்.
இசை: A phrasal verb is an expression.
பாட்டி: Phrasal verb ஆனது main verb இன் actual meaningஐ மாற்றி புதிய அர்த்தத்தை கொடுக்கும்.
மித்ரன்: ஓ அப்படியா!
பாட்டி: Take என்ற verbன் meaning என்ன?
இசை: Take என்றால் “எடு” என்று அர்த்தம்.
பாட்டி: இப்போது Take உடன் off என்ற preposition அல்லது adverb ஐ சேர்க்கிறேன். இப்போது இதன் meaning என்னவாக மாறும் என்று சொல்லுங்கள்?
மித்ரன்: தெரியலையே பாட்டி.
பாட்டி: take off என்றால் departure என்றும் ஒரு meaning இருக்கிறது.
பாட்டி: இப்போது சொல்லுங்கள். The flight will take off at 3 am என்பதன் பொருள் என்ன?
உமையாள்: அதிகாலை 3 மணிக்கு விமானம் புறப்படும். சரியா பாட்டி?
பாட்டி: மிகவும் சரி.
இசை: Phrasal verb பற்றி இன்னும் விளக்கமாக சொல்லிக்கொடுங்க பாட்டி
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்