கொஞ்சம் technique கொஞ்சம் English 188: Direct Speech to Indirect Speech - Conjunction எங்கு வர வேண்டும்!

கொஞ்சம் technique கொஞ்சம் English 188: Direct Speech to Indirect Speech - Conjunction எங்கு வர வேண்டும்!
Updated on
1 min read

உமையாள்: Direct speech லிருந்து Indirect speech-ற்கு மாற்றும் போது சரியான Conjunction-ஐ நாம் பயன்படுத்த வேண்டும். உனக்குத் தெரியுமா?

மித்ரன்: Conjunction ஆ? அது எங்கு வருகிறது?

இசை: Indirect speech -இல் Conjunction இருக்கிறதே! கவனித்தது இல்லையா?

மித்ரன்: இல்லையே.

உமையாள்: Indirect speech-ற்கு மாற்றும் போது Reporting speech-ற்கும் Reported speech-ற்கும் இடையே conjunction-ஐ நாம் எழுத வேண்டும்.

இசை: Conjunction தான் இரண்டு வாக்கியங்களையும் இணைக்க உறுதுணையாக இருக்கிறது.

இனியன்: நான் ஒரு example சொல்லட்டுமா?

He says, “I am hungry.”

He says that he is hungry.

இசை: Declarative sentence-ஐ Direct speech லிருந்து Indirect speech-ற்கு எப்படி மாற்றுவது என்று நேற்று பார்த்தோம் அல்லவா. அதில் ஒன்று தான் இது.

மித்ரன்: ஆமாம். இப்போது தான் நினைவுக்கு வருகிறது. எல்லா Indirect speech sentence லிலும் that வந்திருந்தது.

உமையாள்: Conjunction எவ்வளவு முக்கியமான Role play இங்கு செய்கிறது என்று பார்த்தாயா?

இசை: மிகவும் சரியாக சொன்னாய். Quotes ற்குள் உள்ளே உள்ள வாக்கியத்தையும், Quotes ற்குள் வெளிய உள்ள வாக்கியத்தையும் இணைக்க பெரிய உதவி செய்கிறது.

பாட்டி: இந்த Conjunction ஆனது Type of sentence-ஐப் பொறுத்து மாறுபடும்.

உமையாள்: அப்படியா, ஒரே Conjunction-ஐ எல்லாவற்றிக்கும் பயன்படுத்தக் கூடாதா?

பாட்டி: கூடாது.

பாட்டி: அது போக Reporting speech இல் வரக் கூடிய verb-ம், Indirect speech-ற்கு மாற்றும் போது, மாற்ற வேண்டும்.

மித்ரன்: இதையும் Type of sentence-ஐ பொறுத்தே மாற்ற வேண்டுமா?

பாட்டி: மிகவும் சரியாக கண்டு பிடித்துவிட்டாய். இந்த Table-ஐ பாருங்கள்.

Direct Speech to Indirect Speech - Conversion Table

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in