

மித்ரன்: Direct speech-இல் pronoun-ஐ Indirect speech-ற்கு மாற்றும் போது எப்படி மாற்ற வேண்டும் என்று நேற்று சொல்லிக் கொடுத்தீங்க.
இனியன்: அந்த sentence-ல tense-ஐயும் மாத்தியிருக் கிறீங்களே.
மித்ரன்: அதை இன்று சொல்லித்தாங்க பாட்டி.
பாட்டி: நேற்று நாம் பார்த்த sentence-ஐ யாராவது சொல்லுறீங்களா?
உமையாள்:
Direct Speech: Grandmother said to Iniyan, “I went to the shop.”
Indirect Speech: Grandmother told Iniyan that she had gone to the shop.
இசை: Direct speech-இல் ஒரு tense வருகிறது. மற்றுமொரு tense வருகிறது.
பாட்டி: Direct speech-ல் எந்த tense-ஐ பயன்படுத்தி இருக்கிறோம்?
மித்ரன்: Past tense.
பாட்டி: Indirect speech-ல் எந்த tense-ஐ பயன்படுத்தி இருக்கிறோம்?
இனியன்: Past perfect tense.
பாட்டி: Direct speech-ல் உள்ள reported speech-ஐ Indirect speech-இல் மாற்றும் போது tenseஐ அப்படியே எழுதக் கூடாது. இதற்கு சில முக்கியமான விதிகள் (rules) இருக்கின்றன.
மித்ரன்: ஓ அப்படியா? என்னென்ன rules இருக்கிறது?
Change of tense:
Rule-1: Reporting verb நிகழ்காலத்தில் (present tense) அல்லது எதிர்காலத்தில் (future tense) இருக்கும்போது, reported speech ன் வினைச்சொல்/காலத்தை (verb/tense) மாற்ற வேண்டிய அவசியமில்லை.
Rule-2: Reporting verb கடந்த காலத்தில் (past tense) இருக்கும்போது, இந்த table-ல் கொடுக்கப்பட்டதன் படி reported speech-ஐ மாற்ற வேண்டும்.
Rule-3: General truths and habits போன்றவை Reported speech-இல் வரும்போது, Indirect speech-ல் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. Direct speech இல் எந்த tense-ஐ பயன்படுத்தினோமோ, அதே tense-ஐ Indirect speech யிலும் பயன் படுத்த வேண்டும்.
பாட்டி: இந்த table-ஐ பாருங்கள்.
பாட்டி: இந்த table-ஐ இன்று படித்துவிட்டு வாருங்கள். நாளை examples பார்க்கலாம்.