

இசை: என்னடா, இரண்டு பேரும் எதையோ எழுதி பார்த்துட்டு இருக்குற மாதிரி இருக்குது!
மித்ரன்: ஒருத்தர் சொன்னதை அப்படியே சொல்லவேண்டும் என்றால் direct speech பயன்படுத்த வேண்டும். சரி தானே?
உமையாள்: சரி தான்.
மித்ரன்: எனக்கு அப்படி சொல்ல விருப்பமில்லை என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?
இனியன்: எனக்கும் ஒரு doubt இருக்குது.
இசை: சரி. சொல்லு.
இனியன்: அவர் சொன்ன வார்த்தைகள் மறந்துவிட்டது. முக்கியமான விஷயம் மட்டும் தான் நினைவில் இருக்கிறது. அப்படியெனில் அந்த வார்த்தையை நான் எப்படி எடுத்து சொல்வது?
மித்ரன்: இப்படியெல்லாம் தான் நாங்க பேசிட்டு இருந்தோம். நீங்க வந்துட்டீங்க
பாட்டி: நீங்க யோசித்ததெல்லாம் சரி. ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம்.
இசை: Direct speech என்று ஒன்று இருக்கிறதென்றால் indirect speech என்று ஒன்று இருக்கும் தானே?
பாட்டி: You are absolutely, right?
உமையாள்: Indirect speech என்றால் என்ன பாட்டி?
பாட்டி: Indirect speech இல் பேச்சாளரின் வார்த்தைகளை அப்படியே எழுத வேண்டிய அவசியம் இல்லை. (We do not need to use person’s actual words)
Indirect speech பொதுவாக கடந்த காலத்தைப் (past tense) பற்றி எடுத்துரைக்க பயன்படுகிறது.
Indirect speech இல் எழுதும் போது inverted commas அல்லது double quotations ஐ பயன்படுத்தக் கூடாது.
இசை: எப்படி எழுதினாலும், சொல்லக் கூடிய தகவலை மாற்றக் கூடாது தானே.
பாட்டி: Indirect speech ம் அதே தகவலைத் தான் தெரிவிக்கும். ஆனால் ஒருவரின் வார்த்தைகளை வெறுமனே அப்படியே சொல்வதற்குப் பதிலாக, சொல்லப்பட்டதைப் விவரித்து சொல்வதற்கு உதவுகிறது..
உமையாள்: Direct speech லிருந்து indirect speech ற்கு மாற்ற rules எதுவும் இருக்கிறதா?
பாட்டி: இரண்டு விதமான rules இருக்கிறது.
Common rules. (அனைத்து விதமான வாக்கியங்களுக்கும் பொருந்தும்.)
Specific rule (வாக்கியங்களின் வகைகளை சார்ந்து வரும்.)
பாட்டி: வாக்கியங்களின் வகைகள் நினைவில் இருக்கிறது தானே?
இசை: நன்றாகவே தெரியும் பாட்டி.
Assertive sentence
Imperative sentence (command type)
Imperative sentence (request type)
Interrogative sentence
Exclamatory sentence
பாட்டி: Direct speech இல் வரக் கூடிய சில வார்த்தைகளை Indirect speech இல் அப்படியே பயன்படுத்தக் கூடாது. அவை எப்படி மாறும் தெரியுமா?
இனியன்: சொல்லுங்க பாட்டி.
பாட்டி: “இந்தப் பேனாவை வைத்து நான் இந்தப் பக்கத்தை எழுதினேன்” என்று சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த வாக்கியத்தை இன்னொருவரிடம் வேறொரு தருணத்தில் சொல்ல வேண்டும். அப்போது, “இந்தப் பேனா” என்பது “அந்தப் பேனா” என்று மாறிவிடும்.
மித்ரன்: அப்படியென்றால் “இந்தப் பக்கம்” என்பது “அந்தப் பக்கம்” என்று மாறிவிடும். சரியா?
பாட்டி: Excellent!
பாட்டி: என்னென்ன வார்த்தைகள் எல்லாம் direct speech லிருந்து indirect speech ற்கு மாற்றும் போது பயன்படுத்த வேண்டும் என்று ஒரு list இருக்கிறது.
Change of words:
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்