கொஞ்சம் technique கொஞ்சம் English 182: Direct speech - ஓர் அறிமுகம்!

கொஞ்சம் technique கொஞ்சம் English 182: Direct speech - ஓர் அறிமுகம்!
Updated on
2 min read

மித்ரன்: Double quotes பற்றி படிக்கும் போது, direct speech இல் இதை பயன்படுத்தலாம் என்று பாட்டி சொன்னாங்க …

இனியன்: Direct speech என்றால் என்ன? இப்போது நாம் பேசிட்டு இருக்கிறதும் direct speech தானே?

இசை: இப்போது ஒரு conversation இல் நாம் ஈடுபட்டு இருக்கிறோம். இதை இன்னொருத்தருக்கு எழுத்து வடிவில் அப்படியே சொல்ல நினைத்தால், direct speech ஐ பயன்படுத்தலாம்.

மித்ரன்: Oh! அப்படியா? எழுதும் போது பயன்படுத்தக் கூடிய grammar concept தான் direct speechஆ?

உமையாள்: Exactly!

பாட்டி: ஒருவர் கூறியதை, அவர் சொல்வது போலவே, எழுத்து வடிவில் வார்த்தை மாறாமல் சொல்வதற்கு பெயர் தான் direct speech. அவர் கூறியதை மேற்கோள் காட்ட double quotation ஐ பயன் படுத்த வேண்டும்.

உமையாள்: இப்படி நேரிடையாக எழுதும் போது, ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்ட direct speech உதவுகிறது. அப்படித் தானே பாட்டி?

இசை: இப்படி direct speech ல் எழுதும்போது, வசிப்பவர்களுக்கு சுவாரசியம் இன்னும் கூடும். இதுவும் சரி தானே?

பாட்டி: இரண்டுமே சரி தான். ஒருவரின் வாக்கியத்தை அப்படியே எழுதும் போது, அதை வாசிப்பவருக்கு, ஒருவரின் பேச்சை தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு குறைவு.

உமையாள்: Fiction stories இல் direct speech ஐ அதிகமாக பயன்படுத்தி இருப்பாங்க.

பாட்டி: True. ஒரு கதையில், Direct speech ஆனது கதாபாத்திரங்களின் தொனியையும் மனநிலையையும் வெளிப்படுத்த பயன் படுகிறது.

மித்ரன்: Direct speech ஐ கதையில் சரியாக பயன்படுத்தவில்லை எனில் என்ன ஆகும் பாட்டி?

பாட்டி: ஒரு கதையில் Direct speech ஐ சரியாகப் பயன்படுத்தவில்லை யெனில் உச்சரிப்பிற்கும் அதைப் பற்றிய வாசகரின் கருத்துக்கும் இடையில் ஒரு இடைவெளியை உருவாக்கி விடும்.

இனியன்: Direct speech ற்கு என்று எதாவது rules இருக்கிறதா பாட்டி?

பாட்டி: கண்டிப்பாக இருக்கிறது.

Direct speech rules

1. Direct speech என்பது பேச்சாளரின் சரியான வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதாகும்.

2. Direct speech ல் பேச்சாளரின் வார்த்தைகளை மேற்கோள் குறிக்குள் (double quotation) காட்ட வேண்டும்.

Example: Name of the speaker says or said, “Exact words of the speaker.”

3. பேச்சாளர் பேசும் உணர்ச்சிக்கு ஏற்ப, asked, exclaimed, scolded, screamed, questioned, commanded, requested போன்ற வார்த்தைகளை said ற்கு பதிலாக பயன்படுத்தலாம்.

4. பேச்சாளரின் பெயருக்கு பின்னால் வரக் கூடிய verb ற்கு அடுத்து கண்டிப்பாக comma வர வேண்டும்.

5. Double quotation ற்குள் வாக்கியம் ஆரம்பம் ஆகும் போது, முதல் எழுத்து capital letter இல் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

6. பேச்சாளரின் வாக்கியத்தை நிறைவு செய்யும் போது, பேச்சாளரின் உணர்ச்சிக்கு ஏற்ப வாக்கியத்தின் முடிவில் நிறுத்தற்குறி (a period or question mark or exclamation mark) போன்ற punctuation symbol ஐ சேர்க்கலாம்.

7. மேலும், நிறுத்தற்குறிக்கு (a period or question mark or exclamation mark) பிறகு double quotation symbol ஐ சேர்த்து direct speech ஐ நிறைவு செய்ய வேண்டும்.

8. இப்படி எழுதும் போது, பேச்சாளர் கூறிய அல்லது கூறுகிற வார்த்தைகளை additional ஆக சேர்க்கவோ நீக்கவோ கூடாது.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in