

இசை: இன்று Ellipse பற்றி பார்க்கலாமா?
மித்ரன்: Ellipse ஆ! அது எப்படி இருக்கும்?
உமையாள்: அடுத்ததடுத்து 3 புள்ளிகளை வைப்பதற்கு பெயர் ellipsis. ( … )
இசை: Ellipses இதனுடைய plural ஆகும்.
இனியன்: Ellipse ஐ எங்கு பயன்படுத்த வேண்டும்?
பாட்டி: சில நேரங்களில் word அல்லது phrase அல்லதுline அல்லது paragraph அல்லது quoted passage ஐ தவிர்க்கலாம் என்று நினைக்கும் போது ellipse ஐ பயன்படுத்தலாம்.
இசை: தவிர்க்கலாம் என்றால், அந்த வார்த்தைகள் தேவையில்லை என்று அர்த்தமா?
பாட்டி: ஆமாம், அந்த இடத்தில், அந்த வார்த்தைகள் இல்லாமலே, அந்த வாக்கியத்தின் பொருளை நாம் புரிந்து கொள்ள முடியும்.
உமையாள்: Example ஒன்று சொல்லுங்களேன்.
பாட்டி: Today, after hours of standing in a long queue, we bought ration items.
Today… we bought ration items.
இசை: முதல் வாக்கியத்தில் இன்று நீண்ட நேரம் வரிசையில் நின்று பொருட்களை வாங்கினேன் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
உமையாள்: இரண்டாவது வாக்கியத்தில் நீண்ட நேரம் நின்று என்பதை நீக்கிவிட்டு Ellipse ஐ சேர்த்திருக்கிறீர்கள்.
இசை: Ellipse ன் மூலமாக ஒரு pause வாசிப்பவர்களுக்கு கிடைக்கிறது.
உமையாள்: வாசிப்பவர்களின் யூகத்திற்கு அதை விட்டுவிட்டார்கள் போல.
பாட்டி: மிகவும் சரி. செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் புனைகதை மற்றும் புனைகதை அல்லாத புத்தகங்கள் இல் Ellipse ஐ பயன்படுத்துவார்கள்.
இசை: We have to give space before and after the ellipse. Am I right?
பாட்டி: You are right. மேலும் Ellipse ஐ சேர்ப்பதன் மூலம் ஒரு வாக்கியத்தின் தொடக்கத்தை நீக்கலாம். அந்த சமயத்தில் வாக்கியத்தின் முதல் எழுத்தை அடைப்புக்குறிக்குள் capital letter ல் எழுத வேண்டும்.
… [A]fter hours of standing in a long queue, we bought ration items.
பாட்டி: சில எழுத்தாளர்கள் அடைப்புக்குறியிடப்பட்ட பெரிய எழுத்து மட்டுமே இந்த இடத்தில் போதுமானது என்று சொல்வார்கள்.
[A]fter hours of standing in a long queue, we bought ration items.
உமையாள்: அப்படியெனில் Ellipse ன் பயன்பாடு இங்கு மறைந்து வருகிறதா?
மித்ரன்: அப்படியும் சொல்லலாம்.
இனியன்: நிறைய Examples தாங்க பாட்டி. அப்போ தான் இன்னும் தெளிவு எங்களுக்கு கிடைக்கும்.
Examples for Ellipse
He said, “I … really don’t … understand this.”
I was thinking about you today …
Weeks later … I finally found my Geronimo Stilton book.
She played in the sun … [but] hated it.
What a beautiful garden it was … such a wonderful place.
Yesterday … he enrolled in the class.
I never thought …
I don’t know what time we should wake her up …
I don’t know … I’m not sure.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்