

இனியன்: Curly Brackets பற்றி சொல்லுங்க பாட்டி.
உமையாள்: Curly Brackets-ஐ Flower Brackets என்றும் சொல்லலாம்.
பாட்டி: இது முக்கியமாக mathematical expressions, computer programming languages-ல் பயன்படுத்துகிறார்கள். அதுபோக musical notation-ஐ குறிக்கும் இடங்களிலும் பயன்படுத்தலாம்.
மித்ரன்: இலக்கண விதிப்படி நாம் எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும்?
பாட்டி: ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தையில் வரக் கூடிய பட்டியலை காட்ட இது பயன்படுத்தப்படுகிறது.
இனியன்: அப்படியென்றால்? என்ன சொல்லவரீங்கன்னு புரியலையே!
பாட்டி: ஒரு வாக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கு, உள் வரிசைப்படுத்த முடியுமெனில் அங்கு Curly Brackets-ஐ பயன்படுத்தலாம்.
மித்ரன்: Examples சொல்லுங்க பாட்டி.
பாட்டி: When you are returning back to home, buy snacks, cooking oil, and vegetables {onions, tomatoes, carrots, potatoes, brinjal, cabbage, capsicum}.
இசை: Vegetables-க்கு அடுத்து curly brackets வந்திருக்கிறது. இந்த Curly brackets மூலம் இந்த வரிசையில் உள்ள காய்கறிகள் வேண்டும் என்று ஒரு list-ஐ நாம் கொடுக்கிறோம்.
பாட்டி: Mithran invited his relatives and friends {Iniyan, Isai, Umaiyal} to his younger brother’s birthday celebration.
உமையாள்: இங்கு friends-க்கு அடுத்து curly brackets வருகிறது. எந்த நண்பர்களை எல்லாம் நிகழ்விற்கு அழைக்கிறோம் என்பதை curly brackets-க்குள் தெரிவிக்கிறோம்.
பாட்டி: நீங்க எல்லாரும் curly brackets-ஐ வைத்து ஒரு வாக்கியம் சொல்லுங்க. நான் சரி பார்க்கிறேன்.
மித்ரன்: Choose a color {pink, yellow, blue, orange, green} to paint this wall.
இசை: What is your favorite icecream {strawberry, vanilla, chocolate, butterscotch, mango}?
உமையாள்: I would like to go for a trip {Ooty, Kodaikanal, Goa, Rajasthan, Delhi}.
இனியன்: I have story books {Penicilgalin Attakasam, vithaikara Sirumi, Marpachi Sonna Iragaisyam}
பாட்டி: மேலும், கணிதத்தில், இந்த அடைப்புக்குறிகள் ஒரு தொகுப்பைக் (set) குறிக்கவும் algebraic expressions-ல் grouping symbol ஆகவும் curly brackets பயன்படுத்தப்படுகின்றன.
இனியன்: எடுத்துக்காட்டு ஓன்று கூறுங்களேன்.
பாட்டி: {a, b, c, d, e} means a set that includes a, b, c, d and e.
மித்ரன்: புரிஞ்சது பாட்டி.
இனியன்: Angle Brackets எப்படி இருக்கும் என்று யாருக்காவது தெரியுமா?
மித்ரன்: ஆரம்பிக்கும் போது ஒரு less than symbol-ம், முடிக்கும்போது ஒரு greater than symbol போடுவாங்களே, அதுதானே?
உமையாள்: மிகவும் சரி.
இசை: Angle Brackets-ஐ கோண அடைப்புக்குறிகள் என்று சொல்லலாம்.
பாட்டி: இதுவும், குறியீட்டு மொழிகளிலும் (coding languages) கணித வெளிப்பாடுகளிலும் (mathematical expressions ) பயன்படுத்தப்படுகிறது.
இனியன்: இதுவுமா, சரி தான்.
பாட்டி: அது போக Website name-ஐ எழுதும் போதும், மின்னஞ்சலின் முகவரிகளைக் (email address) எழுதும் போதும் angle brackets-ஐ பயன்படுத்த வேண்டும்.
பாட்டி:
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்