கொஞ்சம் technique கொஞ்சம் English 174: Punctuation Parentheses. தெளிவுபடுத்துவோம்!

கொஞ்சம் technique கொஞ்சம் English 174: Punctuation Parentheses. தெளிவுபடுத்துவோம்!
Updated on
2 min read

மித்ரன்: பாட்டி இன்று Parentheses பற்றி பார்க்கலாமா?

பாட்டி: நிச்சயமாக மித்ரன். முதலில் Parentheses பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க.

உமையாள்: ஏதாவது ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றிய கூடுதல் தகவல்களை (extra information) வழங்க sentence ல்பயன்படுத்தலாம்..

பாட்டி: Very good.

இனியன்: Design design ஆ நிறைய இருக்குதே பாட்டி.

இசை: எந்த bracket ஐ எந்த இடத்தில் பயன் படுத்த வேண்டும் என்று விதிமுறை இருக்கிறதா?

மித்ரன்: Wait. wait நாம Parentheses பற்றி தானே பேசிட்டு இருந்தோம். Bracket எப்படி உள்ளே வந்தது?

இசை: Parentheses மற்றும் Brackets இரண்டுமே ஒன்று தான்.

மித்ரன்: ஓ அப்படியா. சரி சரி.

இனியன்: மொத்தம் இதில் எத்தனை types இருக்கிறது?

பாட்டி: There are four types of brackets.

# Round brackets ()

# Square brackets []

# Curly brackets or Flower brackets {}

# Angle brackets

இசை: Round brackets ஐ வட்ட அடைப்புக்குறிகள் என்று சொல்லலாம்.

மித்ரன்: இதை எங்கே பயன்படுத்த வேண்டும்?

பாட்டி: இது பேசும் நபர், இடம் அல்லது பொருள் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க உதவுகிறது..

உமையாள்: அவை பெரும்பாலும் கூடுதல் தகவலாக இருப்பதால் இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும். சரிதானே?

இசை: உண்மை தான்.

பாட்டி: இதோ, இந்த examples ஐ பாருங்க.

# It is a must for you to follow the rules given (you will be kicked off if you don’t follow them).

# The Apartment (originally built 10 years back) is being painted now.

உமையாள்: Rules ஐ ஒழுங்காக பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும் என்பது அந்த அடைப்புக்குறிக்குள் எழுதப்பட்டிருக்கிறது.

இசை: Apartment ஐ கட்டி இத்தனை வருடங்கள் ஆகிறதுஅதனால் தான் paint அடிக்கிறார்கள் என்பது அடைப்புக்குறிக்குள் உள்ள விஷயங்களை வைத்து நம்மால் கணிக்க முடிகிறது.

பாட்டி: Very good.

உமையாள்: Square Brackets ஐ சதுர அடைப்புக்குறிகள் என்று சொல்லலாமா?

பாட்டி: You are right. Square Brackets ஆனது கணித வெளிப்பாடுகள் மற்றும் குறியீட்டு மொழிகளில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.

இனியன்: அப்படியெனில் நாம் இலக்கண விதிப்படி எழுதும் போது பயன்படுத்த மாட்டோமா?

பாட்டி: இன்னும் இருக்கிறது. ஒருவரின் சொற்களை மேற்கோள் காட்டும்போது, அவற்றை மாற்றவோ அல்லது கூடுதல் தகவல்களை சேர்க்கவோ பயன்படுத்தலாம்..

மித்ரன்: அது எந்த மாதிரியான தகவல்கள் என்று சொல்லுங்க பாட்டி.

பாட்டி: ஒரு கருத்தை (comment) அல்லது தெளிவுபடுத்தலைச் (clarification) சேர்க்க அல்லது வாக்கியத்தில் விடுபட்ட எழுத்துக்கள் அல்லது சொற்களைக் (missing letters or words) குறிக்க Square Brackets பயன்படும்..

பாட்டி: Look at these examples.

# Mithran said, “He [the headmaster] asked us to wait here.”

# Did Iniyan really say he “love[s] writing”?

# That is [the] red signal.

இனியன்: முதல் sentence-ல் Square bracket மூலமாக He யார் என்பதை தெளிவாக சொல்ல முடிகிறது.

மித்ரன்: இரண்டாவது sentence ல் Square bracket மூலமாக s ஆனது miss ஆகிறது என்பது நமக்கு convey ஆகிறது.

உமையாள்: மூன்றாவது sentence ல் Square bracket மூலமாக the ஆனது red signal-ன் importance-ஐ சொல்கிறது.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in