

பாட்டி: Punctuation பற்றி இன்று பார்க்கலாமா?
இசை: நானும் அதைத் தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்.
மித்ரன்: Punctuation க்கு ஐந்து மார்க் வச்சிருக்காங்க ப்பா.
உமையாள்: Full stop, comma ன்னு சாதாரணமா எதையும் விட முடியாது.
பாட்டி: சரி, யாரவது சொல்லுங்க. Punctuation என்றால் என்ன? அதனால் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது?
இசை: Punctuation என்பது குறியீடு (symbol). நாம எழுதக் கூடிய வாக்கியத்தை easy ஆ படிக்க மற்றவர்களுக்கு உதவுகிறது. இது சரியா?
பாட்டி: Correct. உங்கள் எழுத்தை எளிதாகவும் நேர்த்தியாகவும் படிக்க Punctuation மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
உமையாள்: அதை பயன்படுத்துவதற்கு முன்னால் அதைப்பற்றி நமக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும் இல்லையா?
மித்ரன்: அப்போதுதான் எந்த இடத்தில், எந்த symbol ஐ நாம் பயன்படுத்த வேண்டும் என்பது நமக்கு தெரியும்.
பாட்டி: பல்வேறு குறியீடுகள் இருந்தாலும், நாம் பத்திலிருந்து பதினைந்திற்குள் உள்ள ஒரு சில குறியீடுகளையே அடிக்கடி பயன்படுத்துகிறோம்.
இனியன்: அப்படின்னா, அதை மட்டும் சொல்லிகுடுங்க பாட்டி.
பாட்டி: உங்களுக்கு தெரிந்த symbol என்னென்ன? சொல்லுங்க பார்க்கலாம்.
இசை: Full stop, question mark, exclamation mark, comma
உமையாள்: Colon, semicolon, Apostrophe, Quotation marks
இனியன்: அவ்வளவு தான் பாட்டி தெரியும்.
பாட்டி: அது போக, இந்த ஐந்தையும் நீங்க சேர்த்துக்கோங்க. Hyphen, Dash, Parentheses, Slash, Ellipsis.
மித்ரன்: ஒவ்வொன்றையும் எங்கே பயன்படுத்தனும் என்பதையும் சொல்லிக் கொடுங்க பாட்டி.
பாட்டி: முதலில் உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதை சொல்லுங்க. பார்ப்போம்.
வாக்கியத்தின் நேர்த்தி Full stop ஐ ஒவ்வொரு சாதாரண வாக்கியத்தின் (sentence) முடிவிலும் பயன்படுத்த வேண்டும்.
I like this pen.
This is my book.
Banana is a healthy food.
We went to Ooty for a school trip.
மித்ரன்: Question mark ஐ எங்கெல்லாம் கேள்வி கேட்கிறோமோ அங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்.
Do you have a pen?
Where are you going?
What did you eat in the afternoon?
How you will go to the bazar?
இனியன்: எங்கெல்லாம் ஆச்சரியப்படுறோமோ, அங்கெல்லாம் exclamation mark ஐ பயன்படுத்துவோம்.
What a beautiful flower!
How sweet she is!
Wow! The building is so tall.
You did a really good job!
உமையாள்: ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை, பொருட்களை, விஷயங்களை வரிசைப்படுத்தும் போது comma பயன்படுத்துவோம்.
I have a pencil, pen, sharpener, and eraser in my box.
I like apples, oranges, and mangos.
She has been to Chennai, Bangalore, Mumbai and Hyderabad.
I have to buy vegetables, fruits, and groceries today.
பாட்டி: Very good. செமையா சொல்லுறீங்களே.
மித்ரன்: இவ்வளவு தான் பாட்டி எங்களுக்கு தெரியும். இதற்குப் பிறகு நீங்க தான் சொல்லித்தரணும்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்