

பாட்டி: Rule#7 - Capitalize the time periods.
மித்ரன்: அப்படின்னா?
பாட்டி: ஒரு குறிப்பிட்ட ஆண்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட ஆண்டு வரை குறிப்பிட்ட நபர்கள் அல்லது விஷயங்கள் அந்தஇடத்தில் ஆதிக்கம் செலுத்தி இருந்தால் அதனை அந்த நபருடனோ அல்லது விஷயத்துடனோ பொருத்தி அவரின்/அதனின் காலம் அல்லது சகாப்தம் (era) என்று சொல்லலாம்.
இசை: சங்க காலம், சோழர்கள் காலம், பாண்டியர்கள் காலம், பல்லவர்கள் காலம் ன்னு படிச்சிருக்கோம்.
உமையாள்: Christian era, Buddhist era, Mughal era என்றும் சொல்லலாம் தானே.
பாட்டி: Correct. இப்படி era பற்றிக் குறிப்பிடும் வேளைகளில் முதல் எழுத்து capital letter இல் இருக்க வேண்டும்.
மித்ரன்: Silappathikaram and Manimegalai were written in Sangam Era.
இனியன்: The Taj Mahal was built in Mughal Era.
பாட்டி: Rule#8 – Capitalize the first letter of a quote.
உமையாள்: எதையாவது ஒன்றை நாம் மேற்கோள் அல்லது highlight செய்ய விரும்புகிறோம் என்றால் அதை மேற்கோள் குறிக்கு (quotation marks) நடுவில் எழுதுவோம் அல்லவா, அதை சொல்கிறீர்களா.
பாட்டி: Yes. நாம் quote or quotation marksற்குள் முழு வாக்கியம் ஒன்றை எழுதுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது வாக்கியத்தின் முதல் எழுத்து capital letter இல் இருக்க வேண்டும்.
மித்ரன்: I informed my father, "My friends are going to the library".
இனியன்: I follow the rule, “Honesty is the best policy”.
இசை: I believe, “A friend in need is a friend indeed”.
பாட்டி: இதோ, உங்களுக்காக ஒரு reference table.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்