

இசை: என்னடா யோசிச்சிகிட்டே உள்ள வர்ற?
மித்ரன்: எப்படி தப்பு இல்லாம பேசுறது முக்கியமோ அதுபோல தப்பு இல்லாம எழுதுறது எவ்வளவு முக்கியம்ன்னு நேத்து தெரிஞ்சிகிட்டேன்.
இனியன்: ஆமாம். நானும்தான். Capital letter, small letter இந்த இரண்டுக்குமே மதிப்பு இருக்குது. சரியான இடத்தில் சரியான letter-ஐ எழுதவில்லை என்றால் வாக்கியத்துக்கு என்ன மரியாதை?
பாட்டி: அடடா! எவ்வளவு அழகா பேசிட்டு இருக்கீங்க.
உமையாள்: ஆமாம் பாட்டி வேற எங்கெல்லாம் capitalization rules ஐ follow பண்ணனும் ன்னு சொல்லுங்க.
இசை: நிறைய தெரிஞ்சுக்க நாங்களும் ஆசையாக இருக்கிறோம்.
பாட்டி: Rule #3 - Capitalize the pronoun I.
உமையாள்: எங்கெல்லாம் “I” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோமோ அங்கெல்லாம் capital letter இல் எழுத வேண்டும்.
இனியன்: I read books.
மித்ரன்: He's a foodie but I'm not.
பாட்டி: Rule #4 - Capitalize countries, languages, and nationalities.
உமையாள்: Country (Examples: India, China, Sri Lanka, Japan)-ஐ குறிக்கும்போதோ, language (Examples: Tamil, English, Mandarin, Japanese) ஐ குறிக்கும் போதோ nationality (Examples: Indian, Chinese, Sri Lankan, Japanese)-ஐ குறிக்கும் போதோ capital letter இல் முதல் எழுத்து இருக்க வேண்டும்.
மித்ரன்: India is our country.
இனியன்: I speak both English and Tamil.
இசை: We are all Indians.
பாட்டி: Rule #5 - Capitalize family relationships
மித்ரன்: தாத்தா, பாட்டி, அப்பா அம்மா, அண்ணன், அக்கா எல்லாமே தானே?
இனியன்: மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா?
இசை: இவை எல்லாமே family relationship என்று சொல்வோம்.
பாட்டி: ஆமாம். இங்கு ஒருவரின் பெயருக்கு பதிலாக relationship-ஐ மட்டும் வைத்து அழைக்கும் இடங்களில், capital letter இல் முதல் எழுத்து இருக்க வேண்டும்.
மித்ரன்: I love my Amma very much.
இனியன்: We respect our Parents a lot.
இசை: அப்படி என்றால் பெயருடன் சேர்த்து சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது எப்படி எழுத வேண்டும்?
பாட்டி: பெயருடன் இணைத்து உறவுமுறையை சொல்லும் வேளைகளில் பெயரின் முதல் எழுத்து தான் தான் capital letter இல் இருக்க வேண்டும். உறவு முறையை small letter இல் தான் எழுத வேண்டும்.
இனியன்: I go with my sister Isai to the school.
இசை: I take care of my brother Iniyan much.
பாட்டி: Rule#6 - Capitalize acronyms
இனியன்: Acronym என்றால் என்ன பாட்டி?
பாட்டி: Acronym என்பது ஒரு சொற்றொடரில் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களைக் கொண்ட சுருக்கம்.
இசை: Prime Minister-ஐ PM என்றும் Chief Minister-ஐ CM என்றும் சொல்வோம் அல்லவா. இதைத்தான் Acronym என்று சொல்லுவோம்.
உமையாள்: IAS – Indian Administrative Service
மித்ரன்: DSP – Deputy Superintendent of Police
பாட்டி: Correct. Acronym இல் அனைத்து எழுத்துக்களும் capital letter இல் இருக்க வேண்டும்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்