கொஞ்சம் technique கொஞ்சம் English: Capitalization - இதுக்கெல்லாமா மார்க் குறைப்பாங்க!

கொஞ்சம் technique கொஞ்சம் English: Capitalization - இதுக்கெல்லாமா மார்க் குறைப்பாங்க!
Updated on
2 min read

பாட்டி: என்னடா சோகமா இருக்குற? என்ன ஆச்சு?

மித்ரன்: இன்னைக்கு class test வச்சாங்க பாட்டி. என்னோட mark எவ்வளவு தெரியுமா? 9.5 out of 10.

பாட்டி: நல்ல மார்க் தானடா. அதுக்கு ஏன் சோகமா இருக்குற?

மித்ரன்: நான் ஊர் பேரை எழுதும்போது small letter-ல எழுதிட்டேனாம். அதுக்குதான் அரை மார்க் குறைச்சங்களாம்.

பாட்டி: சரி தானே

இனியன்: என்ன நீங்களும் சரின்னு சொல்லுறீங்க.

மித்ரன்: ஒரே ஒரு letter தானே. அதுவும் spelling சரியாதான் இருக்குது. Capital letter-க்கு பதிலா small letter எழுதிட்டேன்.

பாட்டி: கிகிகிகி உன்னோட கவலை புரியுது. அதுக்கு நீ capitalization rules சரியாக படிச்சிருக்கணும்.

மித்ரன்: சரி. இப்போது நீங்க சொல்லி குடுங்க.

பாட்டி: Rule #1 - Capitalize the First Word in a Sentence.

இசை: Sentenceஆரம்பிக்கும்போது வரக் கூடிய முதல் வார்த்தையின் முதல் எழுத்து capital-ல் இருக்க வேண்டும்.

பாட்டி: Rule #2 – Capitalize the Proper Nouns (1. Names, 2. Titles of people, 3. Places, 4. Calendar days, 5. Holidays, 6. Brand and company names, 7. Titles of works)

இசை: யாருடைய Name-ஐ எழுதினாலும் capital-ல் தான் ஆரம்பிக்க வேண்டும்.

மித்ரன்: Mithran, Isai, Umaiyal, Iniyan, இப்படித் தானே?

பாட்டி: Very good.

உமையாள்: Mr., Ms. Dr, Mrs, King, Queen இப்படி ஒருத்தருடைய பெயருக்கு முன்னால் எழுதுவதை Title of people-ன்னு சொல்லுவோம். அது கண்டிப்பாக capital-ல்தான் இருக்க வேண்டும்.

பாட்டி: Places சம்பந்தமாக வரக் கூடிய எல்லாமே capital-ல்தான் ஆரம்பிக்க வேண்டும். தெரு (street), கிராமம் (village), நகரம் (city), நாடு (country) என்று எல்லாமே இதில் அடங்கும்.

இனியன்: Calendar days-ன்னா Sunday, Monday சொல்லுறீங்களா?

பாட்டி: அது மட்டுமல்ல. January, February என்று மாதங்களும் இதில் அடங்கும்.

உமையாள்: Holidays அனைத்திற்கும் முதல் எழுத்து capital letter இல் தான் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு Pongal, Christmas , Ramzan, New year என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

பாட்டி: Brand name (வியாபாரக் குறியீடு), company name போன்றவற்றின் முதல் எழுத்து capital letter இல் இருக்க வேண்டும்.

இசை: Tvs, Sakthi masala, Titan, Three roses எல்லாம் Brands க்கு examplesஆ சொல்லலாமா?

பாட்டி: Correct.

உமையாள்: எங்க பெரியம்மா பையன் ல Infosys company இல் வேலை பார்க்கிறார். அதற்கு முன்னர் TCS யிலும் Tech Mahindra விலும் வேலை பார்த்ததாக சொல்லுவார்.

பாட்டி: Infosys, TCS, Tech Mahindra எல்லாமே company தான். இவற்றை பற்றி எழுதும் போது முதல் எழுத்து capital letter இல் இருக்க வேண்டும்.

இசை: அது போக எந்த கட்டுரை நாம் எழுதினாலும், அதன் தலைப்பின் முதல் எழுத்து capital letter இல் இருக்க வேண்டும். (Title of works)

மித்ரன்: அடேங்கப்பா. இவ்வளவு இருக்குதா?

பாட்டி: இன்னும் இருக்குது, ஒவ்வொன்றாக வரக்கூடிய நாட்களில் பார்க்கலாம்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in