கொஞ்சம் technique கொஞ்சம் English: Articles கவனமாக கையாளுங்கள்!

கொஞ்சம் technique கொஞ்சம் English: Articles கவனமாக கையாளுங்கள்!
Updated on
2 min read

இனியன்: அது “a book” தான்.

மித்ரன்: இல்லை “the book” ன்னு தான் சொல்லணும்.

உமையாள்: என்ன இங்க ஒரே discussion ஆ இருக்குது? என்னன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?

இனியன்: நான் ஒரு book வாங்கினேன். அதை நான் a book ன்னு சொன்னேன். மித்திரனும் அதே book வாங்கியிருக்கிறான். ஆனால் அவன் the book ன்னு சொல்லுறான்.

மித்ரன்: இப்போ இந்த இரண்டில் எது சரி ன்னு எங்களுக்குள்ள discussion போயிட்டு இருக்குது.

உமையாள்: அப்படியா விஷயம். சரி எல்லாரும் இங்க வாங்க?

இசை: “A”, “an”, “the” என்ற மூன்று வார்த்தைகளை articles என்று சொல்லுவோம். இவைகளை பெயர்ச்சொற்களை மாற்றியமைக்கும் உரிச்சொற்கள் (adjectives) என்றும் சொல்லலாம்.

உமையாள்: இதை noun, noun equivalent வார்த்தைகள் வரக் கூடிய இடத்தில் அதற்கு முன்னால் எழுத வேண்டும்.

இசை: இதில் “A”, “An” இரண்டும் indefinite articles. இவை இரண்டும் singular noun ற்கு முன்னால் மட்டுமே வரும். குறிப்பிட்ட ஒன்றை சரியாக கணிக்க முடியாத இடத்தில் Indefinite article ஐ பயன் படுத்த வேண்டும்.

உமையாள்: ஒரு vowel ஐ உச்சரிக்கும் போது vowel (a,e,i,o,u) இன் ஒலி அல்லது உச்சரிப்பு வருகிறது என்றால் அந்த இடத்தில் an பயன்படுத்த வேண்டும்.

இசை: இந்த ஐந்து எழுத்துகளைத் (a,e,i,o,u) தவிர மற்ற எழுத்துக்களை consonant என்று சொல்வோம்.

உமையாள்: Consonant ஒலி வரக் கூடிய இடங்களில் “A” பயன் படுத்த வேண்டும்.

உமையாள்: “The” ஐ definite article என்று சொல்லுவோம். Singular noun or Plural noun என்று எதற்கு முன்னால் வேண்டுமானாலும் இதை எழுதலாம்.

இசை: இது தான் என்று சரியாக உங்களால் ஒன்றை சுட்டிக் காட்ட முடியுமெனில் அங்கு definite article ஐ பயன்படுத்த வேண்டும்.

உமையாள்: இப்போது சொல்லுங்க. யார் சொன்னது சரி.?

மித்ரன்: நான் இந்த புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு சொன்னேன். அதனால் இது definite article. இங்கு the ஐ பயன்படுத்த வேண்டும்.

இனியன்: எனது கையில் புத்தகம் எதுவும் இல்லை. புத்தகம் வாங்கிய தகவலை இவனிடம் சொன்னேன். இது indefinite article. இங்கு a ஐ பயன்படுத்த வேண்டும்.

I have bought a storybook. நான் ஒரு கதை புத்தகத்தை வாங்கினேன்.

I have bought the storybook. நான் இந்த கதை புத்தகத்தை வாங்கினேன்.

பாட்டி: Brilliant! இதை நீங்கள் சரியாகப் பயன்படுத்த வில்லை எனில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறிப்பிடுகிறீர்களா அல்லது குறிப்பிடப்படாத எதோ ஒன்றை சொல்கிறீர்களா என்று உங்களது பேச்சை கவனிக்கிற மற்றவர்களுக்கு குழப்பமாக இருக்கும்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in