

பாட்டி: இன்று நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.
மித்ரன்: கேளுங்க பாட்டி.
பாட்டி: மித்ரன் இனியனைப் போல் உயரமாக இல்லை. இதை positive degree யில் சொல்லுங்கள் பார்க்கலாம்.
இனியன்: Mithran is not as tall as Iniyan.
பாட்டி: இதை comparative degree க்கு மாற்ற வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
இனியன்: இங்கு positive degree யிலேயே not வருகிறதே.
இசை: அப்படியென்றால் comparative degree க்கு மாற்றும் போது not ஐ நீக்கி விட வேண்டுமா?
பாட்டி: Exactly!
உமையாள்: நான் கண்டு பிடித்து விட்டேன். நேற்று பார்த்த rule ன் negative format தான் இன்றைய rule.
பாட்டி: You said very well.
மித்ரன்: Please tell the transformation rule in a detailed way for this.
பாட்டி:
l இரண்டு மனிதர்கள், இரண்டு பொருட்கள், இரண்டு விஷயங்கள் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
l Positive degree க்கு முன்னால் not வருகிறது என்று வைத்துக்கொள்வோம்.
l Comparative degree க்கு மாற்றும் போது, not ஐ நீக்கி விட வேண்டும்.
l முதலில் இருப்பவர் / இருப்பது positive degree யில் இருந்து comparative degree க்கு செல்லும்போது இரண்டாவது இடத்தில் சென்று விடும். இரண்டாம் இடத்தில் உள்ளது முதல் இடத்திற்கு வர வேண்டும்.
l இதற்கு superlative degree கிடையாது.
Transformation Rule – 5
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்