

The Ass and the Mule: A Muleteer set forth on a journey. He took with him his ass and mule. They were loaded with provisions for the journey and wares. The journey started. The ass traveled the plains with ease, carrying his burden happily. But when they began to ascend the steep paths of the mountains, he felt unable to bear the load.
He requested his companion, the mule, to relieve him of a small portion of his burden, but the mule paid no attention to his entreaties. The ass soon fell down dead under the load.
The muleteer was shocked. Not seeing anyone around, he skinned the ass, and then placed its hide, along with the load it was carrying on the mule’s back.
The mule, groaning under the heavy load, said to himself, “I have got what I deserved. If only I had been willing to help the ass in his need, I would not be bearing this additional burden and would not have lost a companion”.
Prevention is indeed, better than cure
கழுதையும் கோவேறுக் கழுதையும்: ஒரு கழுதை ஓட்டி ஒரு பயணத்தை மேற்கொண்டான். அப்போது தன்னுடன் தன் கழுதைமற்றும் கோவேறு கழுதையை (குதிரைக்கும் கழுதைக்கும் பிறந்த விலங்கு கோவேறு கழுதை) ஆகியவற்றையும் உடன் அழைத்துச் சென்றான். வழிக்குத் தேவைப்படும் பலவித சாமான்களையும் விற்பனைப் பொருள்களையும் அவற்றின் முதுகில் ஏற்றினான். பயணம் தொடங்கியது.
சமதளப் பகுதிகளில் கழுதையால், மகிழ்ச்சியுடன் சுமையை சுமந்தபடி, எளிதாக நடக்க முடிந்தது. ஆனால் அவை செங்குத்தான மலைப் பாதைகளில் நடக்கத் தொடங்கியபோது கழுதையால் அந்த சுமையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எனவே அது தன்னுடைய தோழனான கோவேறுக் கழுதையிடம் தனது சுமையில் ஒருசிறு பகுதியை சுமக்குமாறு வேண்டிக் கொண்டது. ஆனால் கழுதையின் வேண்டுகோள்களை கோவேறுக் கழுதை கவனத்தில் கொள்ளவே இல்லை. எனவே சீக்கிரமே அந்தக் கழுதை தான் சுமந்து கொண்டிருந்த பாரத்தை தாங்க முடியாமல் கீழே விழுந்து இறந்தது.
கழுதை ஓட்டி அதிர்ச்சி அடைந்தான். பிறகு அக்கம்பக்கத்தில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு அவன் இறந்த கழுதையின் தோலைப் பிரித்தெடுத்தான். பிறகு பிரித்து எடுக்கப்பட்ட தோலையும் அதுவரை அந்தக் கழுதை சுமந்து வந்திருந்த சுமையையும் கோவேறுக் கழுதை முதுகில் ஏற்றினான்.
மிக அதிகமான சுமையால் துவண்டு கொண்டிருந்த கோவேறுக் கழுதை இப்படி முனகியது. 'எனக்கு இது தேவையான ஒன்றுதான். என் தோழனான கழுதைக்கு ஒரு தேவை ஏற்பட்ட போது அதற்கு உதவ நான் ஒத்துக் கொண்டிருந்தால் இப்போது இவ்வளவு அதிகப்படி சுமையை சுமந்து கொண்டிருக்க மாட்டேன். ஒரு தோழனையும் இழந்திருக்க மாட்டேன்'.
நீதி - எப்போதுமே வந்த பிறகு ஒரு துன்பத்தை சரிசெய்வதைவிட அது வராமலே தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம்.
மொழிபெயர்ப்பாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்