

(Continuation of earlier episode)
Abu prayed to Lord Solomon to give him the wisdom to save himself. He then asked the ifrit, “You claim that Solomon trapped you in that bottle. But I refuse to believe you.”
“What?” cried the ifrit, and his voice boomed like a hundred thunders.
“You are so tall. Your leg is like the big, fat trunk of tree. There is no way you could have fitted inside that tiny bottle. I don’t care if I die. But I don’t want to be killed by a liar.”
“You puny fisherman! I may be evil, but I never lied in my life!”
“Then, prove it,” said Abu.
The ifrit swished its hands. It turned into smoke and slowly, bit by bit, entered the bottle. And from inside, it shouted, “You see I can fit into the bottle.”
Abu quickly picked up the lead seal and trapped the ifrit inside the bottle again. The ifrit tried his best to come out. But he could not break the seal. Abu thanked Solomon, and threw the bottle back into the sea.
(நேற்றைய கதையின் தொடர்ச்சி)
தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் அறிவுத்திறனை அளிக்குமாறு அபு இறைவன் சாலமனை வேண்டிக் கொண்டார்.
பிறகு குட்டிச்சாத்தானைப் பார்த்து ' சாலமன் உன்னைக் குப்பியில் அடைத்ததாக கூறுகிறாய். ஆனால் நீ கூறுவதை நான் ஏற்க மறுக்கிறேன்' என்றார்.
‘என்ன!' என்று குட்டிச்சாத்தான் கத்தியது. அதன் குரல் நூறு இடிமுழக்கம் போல ஒலித்தது.
‘நீ மிகவும் உயரமாக இருக்கிறாய். உனக்கு கால் ஒரு மரத்தின் நீண்ட பருத்த தண்டினைப் போல இருக்கிறது. இவ்வளவு சிறிய குப்பியில் உன்னை அடைப்பது என்பது எந்த விதத்திலும் இயலாத ஒன்று. நான் இறப்பதைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால் ஒரு பொய்யனின் கையால் நான் இறக்க விரும்பவில்லை'
‘ஏய் அற்ப மீனவனே, நான் தீயவனாக இருக்கலாம். ஆனால் என் வாழ்நாளில் பொய் கூறியதில்லை' .
‘அப்படியானால் அதை நிரூபித்துக் காட்டு' என்றார் அபு.
‘குட்டிச்சாத்தான் தன் கைகளை உதறியது. அது புகையாக மாறியது. மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக அந்த குப்பிக்குள் புகுந்தது. பின்பு உள்ளே இருந்து அது கத்தியது 'இப்போது பார்க்கிறாய் அல்லவா இந்தக் குப்பிக்குள் என்னால் அடங்கிவிட முடியும் என்பதை'.
அபு வேகமாக அந்தக் குப்பியின் மீது முன்பு நீக்கப்பட்ட முத்திரையைப் பதித்தார். அதாவது அந்த குட்டிச்சாத்தானை மீண்டும் குப்பிக்குள் அடைத்தார். வெளியே வருவதற்கு அந்த குட்டிச்சாத்தான் தன்னால் முடிந்தவரை முயன்றது. ஆனால் அதனால் முத்திரையை உடைத்து வெளியே வர முடியவில்லை. சாலமனுக்கு நன்றி கூறிய அபு, அந்தக் குப்பியை மீண்டும் கடலுக்குள் வீசினார்.
மொழிபெயர்ப்பாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்