வெற்றிக்கான ஹால் டிக்கெட்

வெற்றிக்கான ஹால் டிக்கெட்
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை வழங்கி அவர்களை தேர்வுக்கு தயார் படுத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மார்ச் மாதம் வந்துவிட்டாலே தேர்வுகளும் தொடங்கிவிடும். அந்த வகையில் இன்று முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்க இருக்கிறது. அதை அடுத்து மார்ச் 13-ம் தேதி தொடங்கி பொதுத் தேர்வு நடைபெறும். இத்தகைய சூழலில் மாணவர்கள் தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொள்ள வேண்டிய தாரக மந்திரம் தேர்வு பயம் தேவை இல்லை என்பது மட்டுமே.

பரீட்சையும் பதற்றமும் பிரிக்க முடியாதது என்று தோன்றலாம். சில எளிய நுட்பங்களை பின்பற்றினால் தெம்பாக தேர்வு எழுதலாம். முதலாவதாக, தேர்வு அட்டவணைக்கு ஏற்றார் போல உங்களுடைய தனிப்பட்ட தயாரிப்பு அட்டவணையை எழுதி அதை பின்பற்றுங்கள். பாடங்களில் சந்தேகம் ஏற்பட்டால் ஆசிரியர்களை தொடர்பு கொள்ள தயங்காதீர்.

சோர்வு உண்டாகும்போது அலைபேசி அல்லது தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து மெல்லிய இசை கேட்கலாம், சில மணித்துளிகள் நடைப்பயிற்சி செய்யலாம்.

தேர்வுக்கு முந்தைய தினம் திருப்புதல் மட்டுமே மேற்கொள்ளுங்கள். இரவு சீக்கிரம் தூங்கினால் காலை புத்துணர்ச்சியோடு விழித்துக் கொள்ள முடியும். முக்கியமாகத் தேர்வெழுதச் செல்லும் முன் சத்தான உணவு அருந்துங்கள்.

பிறகு பாருங்கள், ஆண்டு முழுவதும் நீங்கள் ஊன்றி கற்றதை வெளிப்படுத்தி வெற்றி பெறுவதற்கான ஹால் டிக்கெட்டாக தேர்வு மாறும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in