தேவை சிறப்புத் திட்டம்

தேவை சிறப்புத் திட்டம்

Published on

கடந்தாண்டில் நாடு முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன என்று 2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான மத்திய கல்வி அமைச்சக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சினை தமிழகத்திலும் இல்லாமல் இல்லை. கரோனாவுக்குப் பிறகு ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்க அரசு பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக் கல்வி போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இருந்தபோதிலும் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிப்பதும், மாணவர்கள் சேர்க்கை குறைவதும் நீடிப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மாநிலத்தில், 11 ஆயிரத்து 265 அரசு பள்ளி களில் 30 மாணவர்களுக்கும் குறைவாக இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் கூறப்படுகிறது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அவசியம். இலவச சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், மடிக்கணினி என 16 வகையான நலத்திட்ட உதவிகளை பள்ளி மாணவர்களுக்கு அரசு அள்ளிக் கொடுக்கிறது. இருந்தாலும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்தாக வேண்டும்.

அதற்கு அரசு பள்ளியின் உட்கட்டமைப்புகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், ஆசிரியர் - மாணவர் விகி தாச்சாரம், காலத்திற்கேற்ற நவீன கல்வி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உடனடியாக வழங்க வேண்டும். சமூக நீதியை நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு, மேற்கண்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசர அவசியம். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கையும் விரைவில் நடைமுறைக்கு வருவது சாலச் சிறந்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in