எதைச் செய்தாலும் விரைந்து செய்வது நன்று

எதைச் செய்தாலும் விரைந்து செய்வது நன்று
Updated on
1 min read

தேசியக் கல்விக் கொள்கை 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1986-ல் திருத்தப்பட்டது. 1992-ல் திருத்தப்பட்டாலும் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை.

2019-ல் கஸ்தூரிரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு 2020-ம் ஆண்டுக்கான புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, பல மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தேசிய கல்விக் கொள்கையை தீவிரமாக எதிர்த்து வரும் மாநிலங்களில் ஒன்றான தமிழக அரசு, தனியாக மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.

"அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலும், இடைநிற்றலை ஊக்குவிக்கும் விதத்திலும் இருப்பதாலேயே எதிர்க்கிறோம்" என்கிறது அரசு.

மாநில கல்விக் கொள்கையை வகுக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு, மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு காரணிகள் குறித்து கருத்துக் கேட்பு கூட்டங்களை மண்டல அளவில் நடத்தி வருகிறது.

மாநில கல்விக் கொள்கையை தயாரித்து வெளியிட தாமதமாகும் சூழல் நிலவுகிறது. மாணவர்கள் நலன் கருதி விரைந்து மாநிலக் கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து முடிவெடுக்கலாம். எதைச் செய்தாலும் விரைந்து செய்வது நன்று. பெற்றோரின் எதிர்ப்பார்ப்பும் அதுவாகவே இருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in