மனிதர்களுக்கு இயந்திரம் மாற்று ஆகாது!

மனிதர்களுக்கு இயந்திரம் மாற்று ஆகாது!
Updated on
1 min read

சூடான் நாட்டின் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் நூற்றுக்கும் அதிகமாக பயணிகளுடன் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது அதன் விமானிகள் அசந்து தூங்கிக் கொண்டிருந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன விமானம் பறந்து கொண்டிருந்தபோதே அதன் விமானிகள் தூங்கி விட்டார்களா என்று அதிர்ச்சியாக உள்ளதா? ஆம்! இந்த விமானம் எத்தியோப்பியாவை நெருங்கிக் கொண்டிருந்தபோது அதை இயக்கிய இரண்டு விமானிகளும் விமானம் தானாக இயங்கும் ‘ஆட்டோ பைலட்’ இயக்கியை செயல்படுத்திவிட்டு தூங்கி விட்டனர். இதனால் விமானம் தரையிறங்க வேண்டிய இடம் வந்த பிறகும் பறந்து கொண்டே இருந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பலமுறை விமானிகளை தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்கவில்லை. தரையிறங்க வேண்டிய இடத்தை கடந்து விமானம் பயணித்ததால் ‘ஆட்டோ பைலட்’ துண்டிக்கப்பட்டு அபாய ஒலி எழுப்பப்பட்டது.

அதன் பிறகே அந்த இரண்டு விமானிகளும் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்துள்ளனர். ஒரு வழியாக 25 நிமிடங்கள் தாமதத்துக்குப் பிறகு பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கியுள்ளனர்.

இந்த செய்தியை மனிதர்களுக்கு இயந்திரம் என்றுமே மாற்றாகாது என்ற வாழ்க்கை பாடமாகப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது மாணவர்களே! ஏனெனில் இன்றைய வாழ்க்கை முறையில் எல்லாவற்றுக்குள்ளும் தானியங்கி முறை நுழைந்துவிட்டது.

பலர் தாங்கள் அன்றாடம் எவ்வளவு உணவு உட்கொள்ள வேண்டும், எத்தனை மணித் துளிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி பெரும்பாலான செயல்பாடுகளுக்குத் தொழில்நுட்ப சாதனங்களை சார்ந்திருக்கிறார்கள்.

நம்மை செம்மைபடுத்திக் கொள்ள இயந்திரங்களை பயன்படுத்தலாமே அன்றி இயந்திரங்களை கண்மூடித்தனமாக நம்புவது புத்திசாலித்தனமாகாது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in