மழை வருமுன் நம்மை காப்போம்!

மழை வருமுன் நம்மை காப்போம்!
Updated on
1 min read

அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என்கிற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

மழை தொடர்பான செய்தி வந்தாலே பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதா என்று தான் குழந்தை மனம் தேடும். விடுமுறை அறிவிக்கப்படாத பட்சத்தில் அதுவும் வழக்கமான நாளாகக் கருதப்படும்.

வீட்டிலிருந்து குடை பிடித்துக் கொண்டு அல்லது ரெயின்கோட்டை மாட்டிக்கொண்டு புறப்பட்டு விடுவார்கள். ஆனால், பாதுகாப்பு முக்கியம் மாணவர்களே!

கரோனா காலகட்டம் நம் அனைவருக்கும் தூய்மையின் முக்கியத்துவத்தை அழுத்தமாகக் கற்பித்துவிட்டது. இருப்பினும் மீண்டும் அதை நினைவுபடுத்த வேண்டிய காலம் இது. சேறு, சகதி,ஈரப்பதம் நிரம்பியிருக்கக்கூடிய மழைக்காலத்தில் வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது.

ஆகையால் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கிருமிநாசினியை கைகளில் பூச மறவாதீர். தலை முதல் கால்வரை மழைநீர் புகாதபடி பாதுகாப்பான ரெயின்கோட் அணிந்து செல்லுங்கள். மழை நீர் தேங்கியிருக்கும் பாதையில் கால்பதிக்க வேண்டாம். குழி, சாக்கடை இருக்கக்கூடிய தெருக்களை தவிர்த்துவிடுங்கள்.

மின்கம்பம் அருகே செல்ல வேண்டாம். வரும் வழியில் இடியுடன் கூடிய மழை பெய்தால் மரத்துக்கு கீழே நிற்க வேண்டாம். மரத்தின் நுனி மின்னலால் தாக்கப்பட்டால் அதன் மூலம் வெளிப்படும் மின்னோட்டம் அதற்குக் கீழ் நிற்பவரை நோக்கிப் பாயும். வெளியிலிருந்து வீடு திரும்பியதும் கட்டாயம் கை, கால், முகத்தைச் சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவுவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். சுத்தமான சுகாதாரமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். மழை வருமுன் நம்மை காப்போம்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in