அரசு பள்ளிகள் மூடப்படுவதை தடுப்போம்!

அரசு பள்ளிகள் மூடப்படுவதை தடுப்போம்!
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது.

தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மாணவர் சேர்க்கை இல்லாதவை கடந்த ஆண்டுகளில் படிப்படியாக மூடப்பட்டு வந்த நிலை நீடித்தது.

ஆனால், கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

பெருந்தொற்று காலம் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி பல பெற்றோரை தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாற்ற நிர்பந்தித்தது. அதேபோல தொழில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக் கீடு வழங்கப்படுவதால் அரசு பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு ஓரளவு அதிகரித்துள்ளது.

அதேபோன்று அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவிகள் உயர்கல்வி பெற மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்திருக்கிறது. ஆனால், இவை மட்டும் அரசு பள்ளிகள் நிலைத்திருக்கவும் தழைத்தோங்கவும் போதாது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவடைவதற்கான பல்வேறு காரணங்களை அரசு தீவிரமாக ஆராய்ந்து அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி அவற்றில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும், அரசு பள்ளிகள் மூடப்படாமல் தடுக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தனைக்கும் அப்பால் அரசு பள்ளிகள் கைவிடப்படுவது நம்மை நாமே கைவிடும் செயலாகும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in