வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில்
Updated on
1 min read

அன்பு மாணவர்களே,

இதோ வந்துவிட்டது பொதுத் தேர்வு. இதுவே உங்களின் நீண்ட நாள் கடின உழைப்புக்கு விடை தேடும் களம். கடந்த நாட்களில் தேர்வை எதிர்கொள்வதற்கு பாடப் பயிற்சி மட்டுமல்லாமல் உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு பயிற்சிகள் எடுத்தோம். இவை அனைத்துமே பொதுத் தேர்வு சிறப்பாக எழுதுவதற்குதான். இந்த தேர்வானது நம் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதற்கான சிறு நகர்வு என்பதே உண்மை. அனாலும் முக்கியமான நகர்வு.

இனி இருக்கக் கூடிய சிறு மணிநேர பொழுதையும் மிக கவனமாக பயன்படுத்துங்கள். மீண்டும் சொல்வதென்றால், எப்படியான நிலையிலும் பதற்றம் கொள்ளாதீர்கள். படித்தவற்றை மட்டுமே மறுவாசிப்புக்கு உட்படுத்துங்கள். இறுதி நேரத்தில் புதிய பாடம், புரியாத பாடங்களை படித்து குழம்பிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் படித்தவற்றில் சில அடையாளங்களை வைத்துக் கொள்ளுங்கள். கேள்வித் தாளில் குறிப்பிட்ட கேள்வியை பார்த்ததும், பதில் நினைவுக்கு வருவது போல் சில நுட்பங்களை அமைத்துக் கொள்வது மிகவும் நன்று. ஏனெனில், பதிலுக்காக யோசிப்பதால் ஏற்படும் நேர விரையம் இருக்காது.

குறிப்பிட்ட கேள்வியை வேறு எந்த வடிவத்தில் மாற்றிக் கேட்டாலும் எழுதுவதற்கு தயாராக இருக்க வேண்டும். சில சிக்கலான தருணங்களை எதிர்கொள்வதற்கும் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். தேர்வுக் கூடத்துக்குள் செல்லும் முன் உபகரணங்கள், நுழைவுச் சீட்டை எடுத்துக் கொண்டோமா என்று மறக்காமல் சோதித்துப் பாருங்கள்.

விடுமுறை நாட்களை சரியாக பயன்படுத்துங்கள். தேர்வு காலத்திலோ அதற்கு பின்போ, எப்பொழுதுமே காலம் பொன் போன்றது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தேர்வை சிறப்பாக எழுதி, கல்வி மூலம் புதிய சிந்தனைகள் பெற்று சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வாழ்த்துகள் மாணவர்களே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in