சிறுவர்களிடம் ‘பைக்’ கொடுக்காதீர்கள்

சிறுவர்களிடம் ‘பைக்’ கொடுக்காதீர்கள்
Updated on
1 min read

அன்பார்ந்த ஆசிரியர்களே... பெற்றோரே

இரு சக்கர வாகனத்தை இன்றைய டீன் ஏஜ், இளம் மாணவர்கள் ஒரு சாகச வாகனமாகவே நினைக்கின்றனர். அதை ஓட்ட வயது, பயிற்சி முக்கியம் என்பதை பெரும்பாலானோர் சிந்திப்பதே இல்லை. பெற்றோர் சிலரும் கூட அவசரத்துக்கு ‘பைக்’கில் போய் வா என்று சொல்லும் நிலை உள்ளது. இதனால் உயிரிழப்புகள், பாதிப்புகள் அதிகரிக்கிறது என்பதை உணரவே இல்லை.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவே, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை மத்திய அரசு சமீபத்தில் அதிகரித்தது. அதன்படி, சிறுவனிடம் இரு சக்கர வாகனம் கொடுத்து அனுப்பிய உரிமையாளருக்கு ரூ.42,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் நுவாபோகரி பகுதியைச் சேர்ந்தவர் நாராயண் பெஹெரா. இவர் தனது வண்டியை ஓட்டிச்செல்ல ஒரு சிறுவனிடம் தந்துள்ளார். அந்தச் சிறுவன் தனது நண்பர்கள் 2 பேரை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றான். கடைசியில் போக்குவரத்து போலீஸார் அவனை மடக்கிப் பிடித்தனர். சாலைப் போக்குவரத்து விதிகளுக்கு முரணாக செயல்பட்ட வண்டி உரிமையாளர் பெஹெராவுக்கு ரூ.42,500 அபராதம் விதிக்கப்பட்டது.

பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் ரூ.42,500 நாராயண் பெஹோராவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறு அலட்சியம்தான். இழப்பு பெரிது. நல்ல வேளை அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. இது ஒரு உதாரணம். இனி விழிப்புணர்வோடு இருப்போம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in