வேலையில்லா திண்டாட்டத்துக்கு ஏது தீர்வு?

வேலையில்லா திண்டாட்டத்துக்கு ஏது தீர்வு?
Updated on
1 min read

உலக நாடுகளில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுவதால் நம்இளைஞர்களோடு சேர்ந்து நாட்டின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறி வருகிறது.

பட்டம் பெற்றிருந்தும் பணித் திறன் போதாமையால் திண்டாடும் இளைஞர்கள் ஒருபுறம். மறுபுறம் ஒரு சில படிப்புகளை மட்டுமே படித்துவிட்டு அதற்குரிய வேலை கிடைக்காமல் தகுதிக்கு குறைவான வேலைகளைச் செய்தபடி அல்லாடும் இளைஞர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் இது தொடர்பாக தன்னுடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார்: ‘‘எல்லோரும்உயர்கல்வியைத் துரத்தக்கூடாது. ஏனென்றால் எல்லோரும் முனைவர் பட்டம் பெற்றால் பியூன் வேலைக்கான வரிசையிலும் பிஎச்.டி. படித்தவர்கள் நிற்க வேண்டி வரும்’’. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள்தான் உயர்ந்தவை என்ற எண்ணம் இன்றும் நீடிக்கிறது.

ஆனால், நிதர்சனத்தில் நாட்டின் உயரிய பணியாக கருதப்படும் குடிமைப் பணிக்கு மிக பொருத்தமானவை கலை படிப்புகளே. அதே போல் பல்வேறு படிப்புகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். உதாரணத்துக்கு, கல்வியில் தலைசிறந்த தேசமான பின்லாந்து ஆசிரியர் பதவிக்கு அதிகபட்சமான ஊதியம் வழங்குகிறது.

ஜெர்மனியில் எலக்ட்ரீஷியன், பிளம்பர் போன்ற தொழில்முறை நிபுணர்களுக்கு உயரிய சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படி அனைத்து துறைகளும் மாண்புடன் நடத்தப்பட்டால் வேலையில்லா திண்டாட்டத்துக்கும் தீர்வு கிடைக்கும் நம்முடைய இளைஞர்களின் எதிர்காலமும் ஒளிரும். அதன் மூலம் நாடும் வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடைபோடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in