வெற்றிக்கொடி ஏந்துவோம்...

வெற்றிக்கொடி ஏந்துவோம்...
Updated on
1 min read


அன்புச் செல்வங்களே..

வெற்றிக் கொடி என்ற இந்த நாளிதழ் உங்களுக்காகவே, உங்கள் உயர்வுக்காகவே புதிதாக வெளி வருகிறது. இதில் நீங்கள்தான் கதாநாயகர்கள். உங்கள் பங்களிப்புடன், உங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்களிப்பும் இதற்கு முதுகெலும்பாக இருக்கப் போகிறது.

உங்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் நாளிதழாக வெற்றிக் கொடி வெளிவருகிறது. உங்களுக்கு தேவையான செய்திகள், கட்டுரைகள், அறிவியல், தொழில்நுட்பங்கள், வரலாறு, படங்கள் என அனைத்து அம்சங்களையும் தாங்கி வருகிறது.

வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை தரக் கூடியது பள்ளிக்கூடம்தான். எத்தனை வயதானாலும் படித்த பள்ளியை, சந்தித்த நண்பர்களை, சிறந்த ஆசிரியர்களை மறக்க முடியாது. உங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பெற்றோருக்கு அடுத்த நிலையில் இருப்பது பள்ளிக்கூடமும் ஆசிரியர்களும்தான். அவர்களுடன் சேர்ந்து வெற்றிக் கொடி நாளிதழும் உங்களுக்கு தேவையானதை வழங்கும். நீங்களும் உங்கள் கருத்துகளை, திறமைகளை இங்கு வெளிப்படுத்தலாம்.

ஒவ்வொரு வகுப்பாக தேர்ச்சி பெற்று பிளஸ் 2 முடிப்பீர்கள். அப்போது திறமையுள்ள, உயர்கல்விக்கு தகுதியுள்ளவராக உங்களை ஆசிரியர்களும் பெற்றோரும் பள்ளிக் கூடமும் உறுதி செய்திருக்கும். அதில் வெற்றிக் கொடியின் பங்கும் நிச்சயம் இருக்கும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொன்னது போல், தூங்கவிடாத கனவுகளுடன் இருங்கள்! வெற்றி உங்கள் கைகளில் தானாக வந்து சேரும்.

அன்புடன்
ஆசிரியர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in