மாசுபாட்டில் சிக்கித் தவிக்கும் கிராமங்கள்

மாசுபாட்டில் சிக்கித் தவிக்கும் கிராமங்கள்
Updated on
1 min read

கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் காற்று மாசுபாடு கணிசமாக குறைந்திருப்பதாக கிளைமேட் டிரெண்ட்ஸ் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய மாநிலங்களில் 2017 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் காற்று மாசுபாட்டின் நிலை குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இது. காற்று மாசுப்பாடை குறைக்க மாநிலம் தோறும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து வரும் நடவடிக்கைகள் இதில் ஆராயப்பட்டது.

தமிழ்நாட்டில் போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்துதல் மற்றும் பலவிதமான பசுமை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தேசிய தூய்மை காற்று திட்டத்தின்கீழ் இவை முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், வேறொரு அதிர்ச்சிகரமான தகவல் இந்த ஆய்வில் வெளிவந்துள்ளது.

தமிழ்நாட்டின் நகரப்புறப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாட்டுக்கு இணையான பாதிப்பு கிராமப்புறங்களிலும் உள்ளதாம். நகரங்களில் வாகன புகையினால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்றால், கிராமங்களில் திட கழிவு மேலாண்மையில் உள்ள குளறுபடிகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சு புகையினால் அதிக பாதிப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிராமம் என்றால் பசுமை, செழுமை என்கிற நம்பிக்கை கானல்நீராகி போனதையே இது காட்டுகிறது. வளர்ச்சி என்கிற பெயரால் நம் வாழ்வாதாரத்தையே எப்படியெல்லாம் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டிய தருணம் இது. காற்று மாசுபாட்டை குறைக்கும் வழிகளில் தமிழ்நாடு முனைப்புடன் ஈடுபட்டாலும் நிலம், நீர், காற்று ஆகிய இயற்கையின் கொடைகளைப் பாதுகாக்கும் வழிகளைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பங்களே காலத்தின் தேவை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in