கட்டணம் திரும்ப பெறும் உரிமை

கட்டணம் திரும்ப பெறும் உரிமை
Updated on
1 min read

ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டு விரும்பிய பட்டப்படிப்பு வேறு கல்லூரியில் கிடைத்தால் ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தை 100 சதவீதம் மாணவரிடம் திருப்பி தர வேண்டும் என்று யுஜிசி உயர்கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா மாதிரியான வளரும் நாட்டில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் முதன்முதலாகக் காலடி எடுத்துவைக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்து வருபவர்களே.

அத்தகைய மாணவர்களுக்கு தாங்கள் விரும்பிய பட்டப்படிப்பு விரும்பிய கல்லூரியில் கிடைக்கும்போது மாறிச் செல்ல சட்டப்படி உரிமை உள்ளது. ஆனால், தாங்கள் செலுத்திய கட்டணத்தை உயர்கல்வி நிறுவனங்கள் திருப்பி தர மறுப்பதாக யுஜிசியிடம் பெற்றோரும், மாணவர்களும் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் 815 பல்கலைக்கழகங்கள் மீது இத்தகைய புகார்கள் எழுந்தது. அதனால் இந்த விவகாரத்தில் யுஜிசி நேரடியாகத் தலையிட்டது. கல்விக் கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி அளிக்க மறுத்த உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து ரூ. 12.14 கோடி வசூலித்து 832 மாணவர்களிடம் யுஜிசி திருப்பிக் கொடுத்தது.

இனி வரும் காலத்தில் மாணவர்கள் இத்தகைய கட்டண பிரச்சினையால் பாதிக்கப்படக் கூடாது. அதற்கு யுஜிசி கட்டண கருவூலம் ஒன்றை உருவாக்கலாம். பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் யுஜிசி-யே கட்டணத்தைத் திருப்பி கொடுத்துவிட்டு பிறகு தவறிழைக்கும் கல்வி நிறுவனங்களிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

மேலும் தவறிழைக்கும் கல்வி நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது, அங்கீகாரம் ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in