நாடு போற்றும் மாநகராட்சி மாணவிகள்

நாடு போற்றும் மாநகராட்சி மாணவிகள்
Updated on
1 min read

‘செயற்கை‘ நுண்ணறிவு (ஏஐ) எதிர்கால திறன்கள் ஹாக்கத்தான் 2026’ எனும் தேசிய அளவிலான போட்டி புதுடெல்லியில் அண்மையில் நடை பெற்றது.

இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 117 பள்ளிகளின் 767 கண்டுபிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. முதல் சுற்றில் தேர்வான 60 திட்டங்களை உருவாக்கிய மாணவர்களுக்கு இரண்டு நாள் ஏஐ பயிற்சி முகாம் இணையவழியில் நடத்தப்பட்டது.

இதிலிருந்து 10 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு டெல்லியில் இறுதிச் சுற்று நடத்தப்பட்டது.

இதில் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி நளினா மங்கை, 6ஆம் வகுப்பு மாணவி ஜெய ஆகிய இருவரின் கண்டுபிடிப்புக்கு உயரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளை அகற்றும் ரோபாட்டை வடிவமைத்து அதற்குச் செயல்முறை விளக்கம் அளித்து வெற்றி பெற்று இவர்கள் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவிகளின் ரோபாட்டை பெரிய அளவில் தயாரித்து நெல்லை நயினார்குளம் போன்ற நீர்நிலைகளில் உள்ள கழிவுகளை அகற்றப் பயன்படுத்த முடியும்.

நாடு போற்றும் மாநகராட்சி மாணவிகள்
மௌனமாய் பேசும் உலகம்! | நட்சத்திரக் குழந்தைகள் 12

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in