கொஞ்சம் technique கொஞ்சம் English - 138: Interjection - ஓர் அறிமுகம்

கொஞ்சம் technique கொஞ்சம் English - 138: Interjection - ஓர் அறிமுகம்
Updated on
2 min read

இசை: அச்சச்சோ.. இனியன் வந்து அழ போறான் பாரு.

உமையாள்: ரொம்ப நேரமா முயற்சி எடுத்து ஓரிகாமியில் கொக்கு செய்து வச்சிருந்தான்.

இனியன்: என்ன ஆச்சு?

மித்ரன்: நான் ஏன் இப்படி பண்ணினேன்னு எனக்கே தெரியல.

இனியன்: அது எப்படி உனக்கே தெரியாம பண்ண முடியும்.

உமையாள்: Listen, அவன் ரொம்ப நேரமா முயற்சி செய்து சேர்த்து வச்சிருந்தான்.

இசை: oh no, இனியன் ஆரம்பிச்சுட்டான்

இனியன்: உனக்கு என்ன தெரியும். நான் 2 மணி நேரமா கஷ்டப்பட்டு செய்து வச்சிருந்தேன். இப்படி பிரிச்சு போட்டுட்டியே

மித்ரன்: What, இதை செய்ய அவ்வளவு நேரம் ஆச்சா. மன்னிச்சிரு டா.

இனியன்: Excuse me. எவ்வளவு easy-ஆ மன்னிப்பு கேட்குற. சரி. உன்னை நான் மன்னிக்கனும்னா நீ இதை மறுபடியும் சேர்த்து கொடு.

மித்ரன்: Hello, எனக்கு உண்மையிலே இதை செய்ய தெரியாது.

இனியன்: நீ ஒரு வாரம் கூட நேரம் எடுத்துக்கோ. எனக்கு திருப்பி சேர்த்து மட்டும் கொடுத்திடு.

மித்ரன்: Ah me, எனக்கு உண்மையிலே இதை செய்ய தெரியாது.

இசை: Whoops, மித்ரனும் அழ ஆரம்பிச்சுட்டான். அவனை மன்னிச்சு விட்டுருடா.

இனியன்: சரி சரி அழாதே. நானே திருப்பி பண்ணிடுறேன்.

மித்ரன்: My goodness, ரொம்பவே பயந்துட்டேன்.

பாட்டி: கிகிகி, விளையாட்டு பிள்ளைங்க எல்லாரும்.

இனியன்: சும்மா. லுலுலாயி பாட்டி.

பாட்டி: Interjection (இடைச்செருகல் அல்லது இடைச்சொல்) என்ற வார்த்தையைப் பற்றி இன்று பார்க்கலாம்.

மித்ரன்: சொல்லுங்க பாட்டி

பாட்டி: திடீர் உணர்வுகள் அல்லது உணர்ச்சிகளை வெளிப்படுத்த, பேச்சின் ஒரு பகுதியில் பயன்படும் சொல் தான் Interjection.

இசை: பேசும்போது மட்டும்தான் Interjection வருமா? எழுதும்போது வராதா?

பாட்டி: இலக்கண ரீதியாக எழுதும்போது Interjection-ஐ பயன்படுத்தவதில்லை. பேசும்போது மட்டுமே பயன்படுத்துகிறோம்.

உமையாள்: எங்கெல்லாம், Interjection-ஐ பயன்படுத்த வேண்டும்?

பாட்டி: பெரும்பாலும், வாக்கியம் ஆரம்பிக்கும் பொழுதுதான் Interjection-ஐ பயன்படுத்துவோம்.

இசை: Interjection-ஐ வாக்கியத்தில் சேர்ப்பதால் என்ன நன்மை கிடைக்கும்?

பாட்டி: Interjection-ஐ பயன்படுத்துவதால் வாக்கியத்தின் அர்த்தம் மாறப்போவதில்லை. உணர்ச்சிகளை வெளிக்காட்ட மட்டுமே பயன்படுகிறது.

மித்ரன்: சரி பாட்டி.

பாட்டி: இப்போது நடந்த உரையாடலில் எங்கெல்லாம் Interjection-ஐ நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று சிந்தித்து பார்க்க முடியுமா?

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in