

இனியன்: Weekend ரொம்ப busy போல.
மித்ரன்: ஆமாம், என்னுடைய book shelf இல் புத்தகங்களை அடுக்கி வச்சிட்டு இருந்தேன்.
இனியன்: அதுக்கு ரெண்டு நாள் என்ன? அவ்வளவு books உன்கிட்ட இருக்குதா?
மித்ரன்: ஐம்பது books இருக்கும். ஒவ்வொரு category ஆ பிரித்து வைக்கும் போது, சில interesting title கண்ணில் படும். உடனே அதையும் படிச்சிட்டு இருப்பேன்.
இனியன்: அதனால தான் இங்கே வரலையா?
மித்ரன்: ஆமாம். படிச்சிட்டே, பிரிச்சு வச்சதுனால ரெண்டு நாள் ஆயிடுச்சு.
பாட்டி: ஒரே நேரத்தில், இரண்டு நீண்ட செயல்கள் நடைபெறுவதை சொல்வதற்கு எந்த conjunction ஐ பயன்படுத்தலாம் என்று சொல்லுங்க பார்க்கலாம்.
இசை: While தானே பாட்டி.
பாட்டி: Very good.
இசை: While ற்கு அடுத்து “subject” உடன்” be verb” சேர்ந்து வரக் கூடிய வேளைகளில், “subject be verb” ஐ நீக்கி விட்டும், வாக்கியத்தை அமைக்கலாம்.
உமையாள்: While ற்கு அடுத்து verb வரும் போது, continuous tense ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பாட்டி: While ற்கு அடுத்து simple tenses ஐயும் பயன்படுத்தலாம். Continuous tenses ஐயும் பயன்படுத்தலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்