கொஞ்சம் technique கொஞ்சம் English - 90: How often? உடல்நலத்தை கொஞ்சம் கவனிப்போமா!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 90: How often? உடல்நலத்தை கொஞ்சம் கவனிப்போமா!
Updated on
1 min read

பாட்டி: என்னடா அடிக்கடி கை கழுவிட்டு இருக்குற?

இனியன்: கரோனா பத்தி கேள்விப்பட்டதுல இருந்து இப்படிதான் இருக்கிறான்.

உமையாள்: அவன் ஒரு நாளைக்கு எத்தனை முறை குளிக்கிறான்னு கேளுங்க.

மித்ரன்: ரெண்டு தடவை.

இசை: எத்தனை தடவை ஒரு நாளைக்கு உப்பு போட்டு வாய் கொப்பளிக்கிறான்னு கேளுங்க.

மித்ரன்: மூணு தடவை.

இனியன்: எத்தனை தடவை ஒரு வாரத்தில் யோகா பண்ணுறான்னு கேளுங்க?

மித்ரன்: நாலு தடவை.

பாட்டி: நல்ல விஷயம்தானே பண்ணுறான்.

மித்ரன்: எத்தனை தடவை என்பதை English-ல எப்படி சொல்லணும் பாட்டி?

பாட்டி: How often-ன்னு சொல்லணும்.

இனியன்: எங்கெல்லாம் How often-ஐ பயன்படுத்தணும்?

பாட்டி: ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து ஒரு விஷயத்தை செய்யும் பொழுது, How often என்கிற கேள்வி சொல்லை பயன்படுத்த வேண்டும்.

பாட்டி: இதில் One time, Two times ரெண்டையும் , அப்படியே சொல்லக் கூடாது.

மித்ரன்: எப்படி சொல்லணும்?

பாட்டி: One time a day அப்படின்னு சொல்லுறதுக்கு பதிலா once a day ன்னு சொன்னால் standard ஆ இருக்கும். அதேபோல Two times a week-க்கு பதிலா Twice a week-ன்னு சொல்லுறது சரியாக இருக்கும்.

உமையாள்: என்னுடைய friends சில பேரு three times என்பதற்கு thrice-ன்னு சொல்லி நான் கேட்டிருக்கிறேன். அப்படி ஒரு word இருக்குதா?

பாட்டி: பேச்சு வழக்கிலே thrice என்கிற வார்த்தையை பயன்படுத்திட்டு இருக்காங்க. “Three times” என்று சொன்னால்தான் மிகவும் சரியாக இருக்கும்.

- (தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in