இன்று என்ன நாள்
நவ.18: இன்று என்ன? - கப்பலோட்டிய தமிழன்
செக்கிழுத்த செம்மல், வ.உ.சி., கப்பலோட்டிய தமிழன் என்று மக்களால் அழைக்கப்பட்டவர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார் வ.உ.சிதம்பரனார். சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். எஸ்.எஸ்.காலியோ, எஸ்.எஸ்.லாவோ என்ற இரண்டு நீராவி கப்பல்களை வாங்கினார்.
இதனால் ஆங்கிலேய வியாபாரிகள் கோபமடைந்தனர். கப்பல் சேவையை தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே நடத்தியதன் மூலம் முதல் உள்நாட்டு கப்பல் சேவையை தொடங்கிய மனிதர் என புகழப்பட்டார். அவரது துணிச்சலான செயல்பாடுகளால் வழக்கறிஞர் பட்டம் பறிக்கப்பட்டது. கைது செய்து சிறையில் செக்கிழுக்க வைத்தனர். விடுதலைக்கு பிறகு நொடிந்துபோய் நோயுற்றார். தூத்துக்குடியில் இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில் தங்கியிருந்தவர் 1936 நவம்பர் 18-ம் தேதி மரணமடைந்தார்.
