பழைய ரயில் பெட்டிகளை உணவகமாக மாற்றிய ரயில்வேத் துறை

பழைய ரயில் பெட்டிகளை உணவகமாக மாற்றிய ரயில்வேத் துறை
Updated on
1 min read

கொல்கத்தா: பழைய ரயில் பெட்டிகளை மறுசுழற்சி முறையில் உணவகமாக இந்திய ரயில்வேத்துறை மாற்றியிருப்பது மக்களை ஈர்த்துள்ளது. இந்திய ரயில்வே பழைய ரயில் பெட்டிகளை அழிக்காமல் உணவகமாக மாற்றியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் புதிய ஜல்பைகுரி ரயில் நிலையத்தில், பழைய ரயில் பெட்டியை புணரமைத்து ‘ரயில் கோச் ரெஸ்டாரண்ட்’ என்ற உணவகத்தை வடகிழக்கு ரயில்வே நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

இந்த உணவகத்தில் பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், சில்லி சிக்கன், மொமோஸ், தோசை, டீ போன்ற பல்வேறு தரப்பினரை கவரும் உணவுகள் விற்கப்படுகின்றது. உணவு சுவையும் தரமுமாக இருப்பதுடன் உணவுப் பொருட்களின் விலையும் குறைவாக உள்ளது. இதனால், ரயில் பெட்டி உணவகம் மக்களை ஈர்த்துள்ளது. ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் இந்த உணவகத்தில் விரும்பி சாப்பிடுகின்றனர். இதற்கு ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in