

சென்னை: தமிழக அரசின் நிலஅளவை பதிவேடுகள் சார்நிலைப் பணி மற்றும் நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர், உதவி வரைவாளர் பதவிகளுக்கான காலியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 6-ம் தேதி காலையும் பிற்பகலும் நடைபெற உள்ளது. தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை பதிவேற்றம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா தெரிவித்துள்ளார்.