10, பிளஸ் 2 துணைத்தேர்வு: அக்.31-ல் சான்றிதழ்

10, பிளஸ் 2 துணைத்தேர்வு: அக்.31-ல் சான்றிதழ்
Updated on
1 min read

சென்னை: 10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அக்டோபர் 31-ம் தேதி வழங்கப்படுகின்றன.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராமவர்மா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான உடனடி துணைத் தேர்வு கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 31-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது. தனித்தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்களை அக்.31-ம் தேதி முதல் அவரவர் தேர்வெழுதிய மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். மேலும், இதுதொடர்பான கூடுதல் தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in