மே.தீவுகள் அணி தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக சிம்மன்ஸ் முடிவு

மே.தீவுகள் அணி தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக சிம்மன்ஸ் முடிவு
Updated on
1 min read

செயின்ட் ஜான்ஸ்: மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக பில் சிம்மன்ஸ் முடிவு செய்துள்ளார். தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் மேற்பார்வையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றது. அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் உள்ளார்.

ஆனால் இந்த அணி தகுதிச் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறிவிட்டது. இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக பில் சிம்மன்ஸ் முடிவு செய்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அவர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. இதுவரை 2012, 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிகளில் மேற்கிந்தியத் தீவு அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2007-ம் ஆண்டிலிருந்து அந்த அணி டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆனால், முதல் முறையாக அந்த அணி தகுதிச் சுற்றுப் போட்டியிலேயே தற்போது வெளியேறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in