

“எனது தேசத்தில் மோசமான நெருக்கடி நிலை உருவாகியிருப்பதை உங்களுக்குத் தெரிவிப்பதுடன் இந்திய அரசின் உடனடி உதவியையும் கோருகிறேன்” என 1947 - ல்அக்., 26 அன்று கடிதம் எழுதினார் ராஜா ஹரிசிங். விடுதலைக்கு பிறகு காஷ்மீர், இந்தியாவுடனா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்று சமஸ்தானங்கள் முடிவெடுக்க வேண்டி வந்தது. தனி நாடாகவே இருக்க காஷ்மீர் மன்னர் ஹரி சிங்குடன் மக்களும் விரும்பினர். பாகிஸ்தான் பதான் இன படைகளும், ராணுவத்தினரும் காஷ்மீருக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்தியாவுடன் இணைந்தால் ராணுவ உதவிகள் கிடைக்குமென மவுண்ட்பேட்டன் உறுதியளித்தார். ஸ்ரீநகரை நோக்கி பதான் படைகள் முன்னேறிய நிலையில், இந்தியா காஷ்மீருக்கு உதவவே காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.