தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி: மதுரையில் நடக்கிறது

தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி: மதுரையில் நடக்கிறது
Updated on
1 min read

சென்னை: அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி அக்டோபர் 27 முதல் நவம்பர் 30-ம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தகுமார் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்விஅதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகள், அரசு பள்ளி தலைமைஆசிரியர்கள் என சுமார் 12,000பேருக்கு தலைசிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு, தலைமை திறன், மேலாண்மை ஆகிய கருத்துருகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, நடப்பு கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளஅனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தலைமைப் பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்ட பயிற்சி முகாம்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி அக்டோபர் 27 முதல் நவம்பர் 30-ம் தேதி வரை மதுரையில் பல்வேறு கட்டங்களாக நேரடியாக அளிக்கப்பட இருக்கிறது. அப்பட்டியலில் உள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து பயிற்சிக்கு அனுப்பவேண்டும். மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in