

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் அனுமதி அளிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன தொழில் துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கோரியுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தால் வண்டுகள், அந்துப் பூச்சிகள், தேனிக்கள் போன்ற இனங்களை சிங்கப்பூரில் வசி்ப்பவர்கள் உணவாக உட்கொள்ள முடியும். பூச்சிகளை உணவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிடம் இருந்து இது தொடர்பான நடைமுறைகளை சிங்கப்பூர் உணவுத்துறை பெற்றுள்ளது.