கொஞ்சம் technique கொஞ்சம் English - 58: Off தொடர்ச்சி

கொஞ்சம் technique கொஞ்சம் English - 58: Off தொடர்ச்சி
Updated on
2 min read

மித்ரன்: அக்கா off ஐ வேறு எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?

இசை: off ற்கு away என்கிற அர்த்தமும் உண்டு.

உமையாள்: away ன்னா, ஒன்றிலிருந்து இன்னொன்று விலகி அல்லது தள்ளிப் போகிறது ன்னு அர்த்தம்.

பொருளும் தள்ளிப் போகலாம். நினைவுகளும் தள்ளிப் போகலாம். மனிதரும் தள்ளிப் போகலாம்.

இனியன்: இப்படி தள்ளிப் போற அல்லது விலகிப் போற சமயத்துல away வரும்.

இனியன்: away வரக் கூடிய இடத்தில் off ஐயும் பயன்படுத்தலாம்.

மித்ரன்: அப்படியா? away, off இரண்டையும் வச்சு கொஞ்சம் examples சொல்லுங்களேன்.

Off - away

மித்ரன்: இவ்வளவு தானா, இன்னும் இருக்குதா?

இசை: Unusual ஆ இருக்கக் கூடிய சமயங்களில் off பயன்படுத்தலாம்.

மித்ரன்: Unusual ன்னா என்ன?

இசை: வழக்கத்திற்கு மாறாக ஒரு விஷயம் நடக்குது ன்னு வச்சுக்கிடுவோம். அதை unusual ன்னு சொல்லுவோம்.

உமையாள்: அதாவது எப்பவுமே சந்தோசமா school க்கு வந்துட்டு இருக்கிற நீ, ஒரு நாள் அழுதிட்டு வந்த. அப்போ கூட நாங்க கேட்டோமே. ஏன் இன்னைக்கு unusual ஆ இருக்கிற ன்னு.

மித்ரன்: கிகிகி. ஆமாம். அன்னைக்கு நாய் துரத்துச்சு ன்னு ஓடி வந்து கீழ விழுந்துட்டேன்.

இசை: அதுக்கு பேர் தான் unusual. இந்த மாதிரி இடங்கள்ல unsual க்கு பதிலா off பயன்படுத்தலாம்.

இனியன்: செம க்கா.

இசை: இந்த examples ஐ பாரு.

Off - unusual

இசை: அதே போல, உடல்நிலை, மனநிலை சரியில்லாத சமயங்களில் off பயன்படுத்தலாம்.

Off- Unwell

உமையாள்: இதோ, எல்லாருக்காகவும் off பற்றி ஒரு table போட்டு வச்சிருக்கிறேன். மனப்பாடம் செஞ்சுக்கோங்க. தேவையான நேரத்துல சரியாக பயன்படுத்திக் கோங்க.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in