10, 11, 12 வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

10, 11, 12 வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
Updated on
1 min read

சென்னை: பொதுத்தேர்வு எழுதும் 10,11, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைதோறும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேற்று அனுப்பிய சுற்றறிக்கை விவரம் வருமாறு:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துவருவதைத் தடுக்க பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில்,பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை முதல் 10 இடங்களுக்குள் திருவள்ளூர் மாவட்டத்தை முன்னேற்றும் நோக்கத்தின் அடிப்படையில் "சிகரம் தொடு 2022-2023’’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டத்தில் பங்குபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

அதன்படி, பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளான 10, 11, 12 வகுப்புகளில் பயிலும்மாணவர்களின் கல்வி நலனைக்கருத்தில் கொண்டும், பொதுத்தேர்வை மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்தவும் மேற்கண்ட 3 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளி வேலை நாட்களில் காலை மற்றும் மாலையில் 1 மணி நேரம் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in