Published : 26 Aug 2022 06:06 AM
Last Updated : 26 Aug 2022 06:06 AM

முதுமலையில் சுற்றித் திரியும் வன விலங்குகள்: செல்ஃபி எடுத்தால் அபராதம் விதிக்க வனத்துறை முடிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரவு, பகலாக பரவலாக மழை பெய்தது. இதனால் குந்தா, கெத்தை, எமரால்டு, பைக்காரா, கிளன்மார்கன் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இதையடுத்து, குந்தா, பில்லூரில் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய் துறையினர் அறிவுறுத்தினர். தற்போது மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகள் எங்கும் பச்சைப்பசேல் என குளுமையாகக் காட்சியளிக்கின்றன.

கடந்தாண்டு ஏற்பட்ட பனிப்பொழிவால் வனங்களில் பசுமை குறைந்துவறட்சி காணப்பட்டது. வனவிலங்குகள் உணவு மற்றும் நீர் தேடிகேரளா, கர்நாடகா வனப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன.

சமீபத்தில் பெய்த கன மழையால்முதுமலை, சீகூர் மற்றும் சிங்காரா வனச்சரகங்களில் பசுமை திரும்பியுள்ளது. நீர்நிலைகள் நிரம்புவதால் கோடை காலத்தில் இடம்பெயர்ந்த வன விலங்குகள் மீண்டும் தமிழக வனப்பகுதிளுக்கு திரும்பி வருகின்றன.

குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகம் முழுவதும் மழை பெய்து வனத்தில் பசுமை திரும்பி புல் மற்றும் தாவரங்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் வனவிலங்குகளின் உணவுத் தேவையும்பூர்த்தியாகியுள்ளது. இதன் காரணமாக முதுமலையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

முதுமலையை கடந்து செல்லும் கூடலூர்-மைசூர் சாலையோரங்களில் யானைகள், மான்கள் மற்றும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், புலிகள் காப்பகத்தினுள் சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் இவற்றை உற்சாகத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

"சாலையோரங்களில் விலங்குகள் வலம் வருவதால், அவற்றை தொந்தரவு செய்யாமல் சுற்றுலா பயணிகள்எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். வன விலங்குகளை கண்டால் செல்ஃபி எடுக்கக்கூடாது. அதையும் மீறி செல்ஃபி எடுப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும்" என்று வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x