தமிழக விஞ்ஞானிகளின் நூல்கள்: சென்னையில் நாளை வெளியீடு

தமிழக விஞ்ஞானிகளின் நூல்கள்: சென்னையில் நாளை வெளியீடு
Updated on
1 min read

சென்னை: இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை குறிக்கும் வகையில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு இருவரும் இணைந்து ‘இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை’ என்ற அறிவியல் தமிழ் நூலை எழுதியுள்ளனர்.

இந்நூலின் வெளியீட்டு விழா, நாளை (27-ம் தேதி) மாலை 5 மணி அளவில் சென்னை பிராட்வே தூய கபிரியேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் நடக்கும் இவ்விழாவில், விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன், போலீஸ் டிஐஜி சாமுண்டேஸ்வரி, பள்ளியின் தாளாளர் ஜான்சன் பாஷ்யம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். நூலாசிரியர்கள் மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு ஆகியோர் ஏற்புரை நிகழ்த்துகிறார்கள்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரை, ‘சந்திரயான், மங்கள்யான்’ செயற்கைக்கோள் திட்டங்களால் அறியப்பட்டவர். இவர், பல அறிவியல் நூல்களை தமிழில் எழுதியுள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு, போர் விமான இன்ஜின் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இருவரும் இணைந்து ஏற்கெனவே ‘விண்ணும் மண்ணும்’ என்ற அறிவியல் தமிழ் நூலை எழுதியுள்ளனர்.

இவர்களின் இரண்டாவது நூலான, ‘இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை’ தற்போதுவெளியிடப்படுகிறது. இந்த நூலில்இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், இவற்றால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள நன்மைகள், இளம் தலைமுறையினருக்கு உருவாகியுள்ள எதிர்கால வாய்ப்புகள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in