

சென்னை: 2022-2023-ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த படிப்புகளான பி.பார்ம் (லேட்டரல் என்ட்ரி), பி.எஸ்சி நர்சிங் (போஸ்ட் பேசிக்), டிப்ளமோ இன் சைக்கியாட்ரிக் (போஸ்ட் பேசிக்), டிப்ளமோ இன் நர்சிங் (பெண்கள்) ஆகிய மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இன்று (ஆக.1) காலை 10 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வரும் 12-ம் தேதி பிற்பகல் 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in <http://www.tnhealth.tn.gov.in/>, www.tnmedicalselection.org <http://www.tnmedicalselection.org/> ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.