Published : 05 Jul 2022 06:28 AM
Last Updated : 05 Jul 2022 06:28 AM

புதிய கல்விக் கொள்கை - 2020: தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்க ஆன்லைன் மூலம் கருத்துகேட்பு

புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாக தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்க ஆன்லைன் பொது ஆலோசனைக் கணக்கெடுப்பு மூலம் பொது மக்களின் கருத்துக்களை அறிய மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு 2020-ம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இது தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் கல்வி முறையின் தரத்தை மேம்படுத்த பரிந்துரைக்கிறது. தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் செயல்முறை மாவட்ட ஆலோசனைக் குழுக்கள், மாநிலகண்காணிப்பு குழுக்கள் மற்றும் மாநிலவழிநடத்தல் குழு ஆகியவற்றின் மூலம்தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய கண்காணிப்பு குழுக்கள் மற்றும் தேசிய வழிநடத்தல் குழு போன்றவை. ஒரு தொழில்நுட்ப தளம் - இணையதளம் மற்றும்மொபைல் பயன்பாடு, வேலைகளை காகிதமில்லாத முறையில் செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் போன்ற கல்வியுடன் தொடர்புடையவர்களை சென்றடைய, கீழ்நிலை அணுகுமுறையைப் பயன்படுத்தி, மாவட்ட அளவிலான ஆலோசனைகள், மொபைல் செயலி அடிப்படையிலான ஆய்வுகள், மாநில கண்காணிப்பு குழுக்கள் மற்றும் மாநில வழிகாட்டுதல் குழு மூலம் மாநில அளவிலான ஆலோசனைகள் ஆகியவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் நடத்தப்பட்டுள்ளன.

கல்வியாளர்கள், மாணவர்கள், முதலியன அடிமட்ட அளவில் மற்றும் பள்ளிக் கல்வி, குழந்தைப் பருவப்பராமரிப்பு மற்றும் கல்வி, ஆசிரியர் கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி ஆகியவற்றின் எதிர்காலம் பற்றிய அவர்களின் கருத்துக்கள் திரட்டப்படும்.

இந்திய அரசின் பள்ளிக் கல்வி மற்றும்எழுத்தறிவுத் துறை ,கல்வி அமைச்சகம், ஆன்லைன் பொது ஆலோசனைக் கணக்கெடுப்பு மூலம் பொதுமக்களின் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பெறத் திட்டமிட்டுள்ளது, இது மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான உள்ளீடுகளைத் தொகுக்க உதவும்.

அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் உட்பட 23 மொழிகளில்இந்த ஆன்லைன் சர்வே நடத்தப்படுகிறது. ஆன்லைன் கணக்கெடுப்பில் கலந்துகொண்டு, இந்தியாவில் ஒரு வலுவான, மீள்தன்மை மற்றும் இணக்கமான கல்வி முறையை உருவாக்க பங்களிக்கவும். இப்போது ஆன்லைன் சர்வே எடுக்க இணைப்பை கிளிக் செய்யவும்: http://vsms.sms.gov.in/OMZhm8YvAQE

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x