Published : 03 Jan 2022 07:05 AM
Last Updated : 03 Jan 2022 07:05 AM

பொறியியல் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல்: அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு

சென்னை

இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரி மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 510-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தகல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்துவெளியேறுகின்றனர். இதற்கிடையே முதல் பருவத்தில் இருந்து சிறப்பாக செயல்படும் மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெறுவார்கள். அதில், பிரிவு வாரியாக முதல் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பல்கலை.யின் தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்

இந்நிலையில் 2020-2021-ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பை முடித்து பட்டதாரிகளாக வெளியேறும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது (www.annauniv.edu) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் பி.ஆர்க் பிரிவில் 52 மாணவர்களும், பி.இ. ஏரோநாட்டிகல் பிரிவில் 42 பேரும், மெக்கானிக்கல் பிரிவில்50 பேரும், ஐடி 52 பேரும் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர்.

அதேபோல், பி.இ. ஆட்டோ மொபைல் பிரிவில் 32 பேரும், சிவில், சிஎஸ்இ, இஇஇ பிரிவுகளில் தலா 51 பேரும், இசிஇ பிரிவில் 52 பேரும் தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். இதர பாடப்பிரிவுகளில் 264 மாணவர்களும் தரவரிசையில் இடம்பெற்றுஉள்ளனர்.

முதுநிலை படிப்புகளை பொறுத்தவரையில், எம்சிஏ பிரிவில் 57 மாணவர்களும், எம்பிஏவில் 53 பேரும் தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர். மேலும், எம்இ-யில் 110 பேர் பேரும், எம்.டெக் படிப்பில் 6 பேரும், எம்.ஆர்க் பிரிவில் 9 பேரும் தரவரிசையிலும் இடம் பெற்றுள்ளனர்.

தனியார் கல்லூரி மாணவர்கள்

பல்கலை. தரவரிசைப் பட்டியலில் வழக்கம்போல தனியார் கல்லூரி மாணவர்களே அதிகஅளவில் இடம்பிடித்துள்ளனர். அண்ணா பல்கலை. வளாக மற்றும் அரசு பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x