பிளஸ் 1 துணைத்தேர்வு விடைத்தாள் நகல், மறுகூட்டல்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 1 துணைத்தேர்வு விடைத்தாள் நகல், மறுகூட்டல்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

பிளஸ் 1 துணைத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 11.11.2021 மற்றும்
12.11.2021 (வெள்ளிக் கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்திப் பதிவு செய்துகொள்ளுமாறு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது செப்டம்பர் 2021, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிப்பதற்கு 15.11.2021 (திங்கட் கிழமை) அன்று ஒருநாள் கூடுதலாகக் கால அவகாசம் வழங்கப்படுகிறது''.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

முன்னதாகத் தேர்வு முடிவுகள் நவம்பர் 9-ம் தேதி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in