Published : 02 Nov 2021 03:08 AM
Last Updated : 02 Nov 2021 03:08 AM

‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’ முன்னிட்டு நடைபெற்ற விநாடி வினா போட்டியின் இறுதிச் சுற்று முடிவுகள்: என்எல்சி இந்தியா நிறுவனம் - ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்தின

‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’ முன்னிட்டு பள்ளி மாணவ - மாணவிகளுக்கான ஆன்லைன் விநாடி வினா போட்டியை ‘என்.எல்.சி. இந்தியா நிறுவனம்’, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து நடத்தின. இதன் இறுதிப்போட்டி கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் நடைபெற்றன.

‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’ அக்-26 முதல்நவ-1 வரை நாடெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு ‘சுதந்திர இந்தியா @ 75 : நேர்மையுடன் கூடிய தற்சார்பு’ எனும் கருப்பொருளில் ஊழல் எதிர்ப்பு குறித்த சமூக விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்துடன் இந்த விநாடி வினா போட்டியை நடத்தின.

சீனியர்களுக்கான விநாடி வினாபோட்டியைத் தொடங்கி வைத்து,என்எல்சி-யின் சீனியர் விஜிலென்ஸ்அதிகாரி எல்.சந்திரசேகர் பேசிய தாவது:

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டியும், இந்தியாவின் முதல் துணை பிரதமரான சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டியும் நடத்தப்படும் இந்த விநாடி வினா போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள். நாம் எந்த நாட்டையும், எந்த மதத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நம்மிடம் என்றும் நிலைத்திருப்பது நமது பண்புகளும், நம்மின் மீதான சமூக மதிப்புகளும்தான்.

நேர்மை ஒன்றுதான் அனைத்து துறைகளிலும் மக்களின் தேவையாக இருக்கிறது. எந்த ஒரு நல்ல விஷயத்தையும் நாம் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமே நமது பழக்கமாக அது மாறும். நாங்கள் படிக்கிற காலங்களில் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளின் மூலமாக பல உயரிய பண்புகள் போதிக்கப்பட்டன. இன்றைய மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளுக்காக மட்டுமே படிக்கும் நிலை உருவாகியுள்ளது. நாளைய சமுதாயம் நேர்மைமிக்க சமுதாயமாக மாற வேண்டுமென்கிற எதிர்பார்ப்போடு இந்த நிகழ்வினை நடத்துவதில் பெருமையடைகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

5 முதல் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஜூனியர் பிரிவினருக்கான இறுதிச் சுற்று போட்டியில் கோவை லிஷியோ பள்ளி மாணவர் பி.ஷிரவன் முதலிடத்தையும், சேலம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியின் பிளாண்ட் காம்பஸ் பள்ளி மாணவர் தேவ்நாராயண் 2-ம் இடத்தையும், நெல்லை ஸ்ரீஜெயேந்திரா சுவாமிகள் வித்யாகேந்திரா பள்ளி மாணவர் அக்‌ஷய் சதீஷ்குமார் 3-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

9 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்ற சீனியர் பிரிவுக்கான இறுதிச்சுற்று போட்டியில் மதுரை மகாத்மா மாண்டோஸ்சரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிமாணவர் முகமது ரிவின் முதலிடத்தையும், கல்பாக்கம் அட்டாமிக் எனர்ஜி சென்ட்ரல் பள்ளி மாணவர் எம்.தினகர் 2-ம் இடத்தையும், கோவை சச்சிதானந்தா நிகேதன் பள்ளி மாணவர் மிதுன் செந்தில்குமார் 3-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

இந்த விநாடி வினா போட்டியை எக்ஸ் குவிஸ் ஐடி-யின் குவிஸ் மாஸ்டர் அரவிந்த் ராஜீவ் ஒருங் கிணைக்க, மதிப்பீட்டாளராக அவினாஷ் பாண்டே செயல்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x