Last Updated : 20 Oct, 2021 06:35 PM

 

Published : 20 Oct 2021 06:35 PM
Last Updated : 20 Oct 2021 06:35 PM

புதுவையில் ஆன்லைனில் கலா உத்சவ் போட்டிகள்- மாநிலப் போட்டிக்கு 72 பேர் தகுதி

புதுச்சேரி

புதுச்சேரி மாவட்ட அளவிலான ஆன்லைனில் நடந்த கலா உத்சவ் போட்டிகளில் தேர்வானவர்களில் இருந்து மாநிலப் போட்டிக்கு 72 பேர் தகுதி பெற்றனர்.

மத்தியக் கல்வி அமைச்சகம் இடைநிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கலா உத்சவ் பள்ளிப் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த வருடம் கரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வழிமுறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

அதன்படி புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வி இயக்கத்தின் சமக்ர சிக்க்ஷா சார்பில் நடனம், இசைக்கருவி மீட்டல் மற்றும் ஓவியம் உட்பட 9 பிரிவுகளில் மாணவர்களிடமிருந்து அவர்களின் தனித் திறன்களைக் காணொலிக்காட்சியாகப் பதிவு செய்து விண்ணப்பிக்கக் கோரப்பட்டு இருந்தது. இதன் மூலம் மொத்தமாக புதுச்சேரி - 221, காரைக்கால்- 92, மாஹே- 41, ஏனாம்- 69 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மாவட்ட அளவிலான போட்டிகளுக்கான மதிப்பீடு இன்று காலை அந்தந்த மாவட்டத்திலும் புதுச்சேரியில் பள்ளிக்கல்வி இயக்ககத்திலும் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கலாஉத்சவ் போட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரராசு தலைமை தாங்கினார். சமக்ர சிக்க்ஷாவின் மாநிலத் திட்ட இயக்குநர் தினகர் மற்றும் கூடுதல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக் கல்வி இயக்குநர் ருத்ர கவுடு போட்டிகளைத் தொடங்கி வைத்தார். போட்டிகளின் ஒவ்வொரு பிரிவிலும் அந்தந்த வல்லுநர்கள் குழு, சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுந்தது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை ராதாகிருஷ்ணன், பாரதிராஜா மற்றும் பாலபவன் பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.

இப்போட்டி தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரராசு கூறுகையில், "ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு போட்டிகளிலும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி வீதம் 9 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 72 பேர்களும் வரும் நவம்பர் 11-ம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x